கடல் கடந்தும் கலை

தமிழ்த்தேனீ
October 05, 2010 09:11 பிப
அமெரிக்காவில் சியாட்டில் மாகாணத்தில் மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் பணிபுரியும் என் மகன் திரு கே வெங்கடநாதன் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் பல இளைஞர்கள்,யுவதிகள் ஆகியோரை இணைத்துக்கொண்டு சியாட்டில் தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக இண்டஸ் கிரியேஷன்ஸ் என்னும் பெயரில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழ் நாடகங்களை நடத்திக்கொண்டிருக்கிறார், இதில் விசேஷமான செய்தி என்னவென்றால் இந்தக் குழுவை நடத்தும் இவர்களே நாடகம் எழுதுகிறார்கள், இயக்குகிறார்கள், நடிக்கிறார்கள், அதுகூட வியக்கத்தக்க செய்தி அல்ல, இவர்களே மேடை நிர்வாகமும் செய்கிறார்கள்,மேலும் மேடை அரங்கத்தையும் இவர்களே திட்டமிட்டு உருவாக்கி நிர்வகிக்கிறார்கள்,இசை இவர்களே அமைக்கிறார்கள், ஒலி ஒளி மற்றும் மேடை நிர்வாகம் உட்பட அனைத்து கலைகளையும் இவர்களே வடிவமைக்கிறார்கள் நேற்று கூட ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்,இந்த நாடகங்களுக்கு என்னுடைய மருமகள் திருமதி கவிதா அவர்களும் ஓவியம் வரைதல், போன்ற பல வர்ணம் பூசும் கலைகளை உருவாக்குகிறார், அரங்கில் உள்ள பல காட்சிகளில் இவரது கைவண்ணம் இருக்கிறது கணிணிப் பொறியாளர்களான இவர்கள் தச்சு வேலை உட்பட அனைத்து வேலைகளையும் இவர்களே தங்கள் கைகளால் செய்து , மேடையில் அரங்கை நிர்மாணிக்கிறார்கள் என்பது மிகவும் பாராட்டத்தக்க செய்தி


தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மிக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள் ,கடல் கடந்தும் தமிழன் கலை மிளிர்கிறது

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பை சொடுக்கிப் பாருங்கள், இவர்களின் திறமை புரியும், வாழ்த்துவோம், பாராட்டுவோம்http://www.youtube.com/watch?v=-4PhUFwBT0gஅன்புடன்

தமிழ்த்தேனீ