ஓட்ஸ் கஞ்சி

nizam
ஆகஸ்ட் 10, 2010 12:52 பிப

தேவையான பொருட்கள்

1 .ஓட்ஸ் ஒரு கப்
2 .பால் ஒரு கப்
3 .சுகர் இரண்டு சிறு கரண்டி
4 .உலர்ந்த முந்தரி 10
5 .அன்டிப்பருப்பு 5
6 .உலர்ந்த பழவகைகள்
7 .தண்ணீர்

தயாரிக்கும் முறை

எழிய முறையில் ஆரோக்கியமான ஒரு காலை உணவு
குறிப்பாக அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு மிக எழிதில் தங்கள் காலை உணவாக எடுத்துகொள்ளலாம்
வளரும் சிறு குழைந்தைகளுக்கும் காலை உணவாகவும் கொடுத்துவரலாம்


செய்முறை :
தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து அதில் ஓட்ஸ் மாவை சிறிது சிறிதாக போடவும்
ஓட்ஸ் நன்றாக வேகும்வரை அடிப்பிடிக்காமல் ஒரு கரண்டியால் இளக்கவும்
இரண்டு அல்லது மூன்று நிமிசத்தில் ஓட்ஸ் வெந்தவுடன் அதில் சுகர் மற்றும் பாலை ஊற்றவும்
ஊற்றிய பால் கொதித்தவுடன் அடுப்பை மூடவும் பிறகு அந்தக் கஞ்சியை ஒரு பாத்திரத்தில்
ஊற்றி அதில் உலர்ந்த முந்திரி ,அன்டிப்பருப்பு . போடவும் (உலர்ந்த பழவகைகள் இருந்தால் போடலாம் )
பிறகு அதை சிறு சூடோடு சாப்பிடவும் .
இப்படி தினமும் காலை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்

குறிப்பு :பாலும் சுகரும் இல்லாமல் (சிறிது உப்பு போட்டு சாப்பிட்டால் உடல் பெருமானை கட்டுப்படுத்தும்)


அளவோடு உண் நலமோடு வாழ்
அ .செய்யது அலி