மோர் குழம்பு

prabakaranmuthiah
ஜூலை 30, 2010 11:59 பிப

தேவையான பொருட்கள்

வெண்டை 5
பூண்டு 5 பல்லு
சின்ன வெங்காயம் 7
இஞ்சி சிறிய துண்டு
பச்சை மிளகாய் 3
கடுகு உளுந்தம் பருப்பு
தேங்காய் 2 தூண்டு
மஞ்சள் தூள்

தயாரிக்கும் முறை

வெண்டை காய் சிறிது சிறிதாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
அதனை எண்ணையில் வதக்கி வைத்துக்கொள்ளவும்.
பூண்டு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் அனைத்தையும் அரைத்துக்கொள்ளவும்.
அதனை நன்றாக வதக்கி விடவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின் வதக்கிய வெண்டை அதனுடன் சேர்கவும்.பின் மஞ்சள் பொடி சேர்கவும். இக்கலவை உடன் மோரை சேர்க்கவும். ஒரு கொதி விட்டு இறக்கி வைக்கவும்.
கடுகு உளுந்து சிறிய வெங்காயத்துடன் தாளித்து அதில் கொட்டவும்.
பருமாறுவதர்கு மோர் குழம்பு தயார்