சோக்ரடீஸ்

dharshi
ஜூலை 26, 2010 10:04 பிப


உலகின் மிகப் பெரிய சிந்தனையாளர்களில் ஒருவர் சோக்ரடீஸ். அவர் சொந்தமாக நூல்களொன்றும் எழுதவில்லை. சோக்ரடீஸ் பிளாட்டோவின் குருவாக இருந்தார்.

மற்றவர்களின் குறிப்பாக பிளாட்டோவின் நூல்களின் மூலமாகத்தான் சோக்ரடீஸின் கருத்துகளை நாம் தெரிந்துகொள்ள முடியும். திறந்த மனத்துடன் அனைத்தைப் பற்றியும் கேள்வி எழுப்புங்கள் அதற்கு விடை காண்பதன் மூலம் அறிவு பெறுங்கள் என்பதுதான் அவரது பாணி.

அறிவியலால் மட்டுமே நன்மை ஏற்படும் என்றும், மனிதர்கள் தங்களைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டுமென்றும் அவர் நம்பினார் ஆயினும் சமூகத்திற்கு கெட்ட வழி காட்டுகிறார் என்று குற்றம் சுமத்தி கி.மு. 399ல் ஆட்சியதிகாரிகள் அவருக்கு மரண தண்டனை விதித்தார்கள்.

வாழ்வை எதிர்கொண்டது போலவே அவர் சற்றும் பதறாமல் மரணத்தையும் ஏற்றுக்கொண்டார். எதையும் கேள்விக் கேட்கும் அவரது குணத்தின் காரணமாக மிகக் குறைவான நண்பர்களையே பெற்றிருந்தார்.

தங்கள் கருத்துக்களும், விவாதங்களும் எதிர்க்கப்படுவதை விரும்புபவர்கள் குறைவாகத்தானே இருப்பார்கள்? அதனால் அவருக்கு மிக அதிகமான எதிரிகள் உருவானார்கள் எனவே அவர் விஷம் அருந்தி இறக்க வேண்டி வந்தது.

நன்றி :- தினகரன், இலங்கை.