பலாப்பழ பாயாசம்

வினோத் கன்னியாகுமரி
ஜூலை 05, 2010 04:03 பிப

தேவையான பொருட்கள்

பலாப்பழச் சுளைகள் - 20, 30 (வருக்கை பலாப்பழம் சிறப்பு)
வெல்லம் - கால் கிலோ
நெய் அல்லது டால்டா தேவையான அளவு
ஏலக்காய் தேவையான அளவு

தயாரிக்கும் முறை

முதலில் வெல்லத்தை நீரில் நன்றாக கரைத்து கரைசலில் கல் இருந்தால் எடுத்துவிடவும்.

பலாப்பள சுழைகளை விதை, மற்றும் தேவையற்றவைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஏலக்காயை பொடித்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு வாணலில் நெய் விட்டு அது இளகியதும் நறுக்கிய பலாப்பழசுழைகளை இட்டு வதக்கவும்.

பின்பு சர்க்கரை கரைசலை அதனுடன் விட்டு அது தண்ணியாக இல்லாமல் கெட்டியாகும் வரை வேகவிட்டு வெந்ததும் ஏலக்காய் பொடியை தூவி கிண்டி எடுத்துவிடலாம்.

மீதம் வந்த பலாப்பழம் இருந்தால் இவ்வாறு செய்து காற்றுபுகாமல் அடைத்து வைத்திருந்து கொஞ்சமாக சாப்பிடலாம். இதில் நெய் சேர்த்திருப்பதால் 4, 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
இது மிக சுவையாக இருக்கும்.


( அம்மா இன்று செய்து தந்தார்கள், எப்படி செய்வது என்று கேட்டு நானும் படித்து விட்டேன். எங்களுக்கும் சமைக்கத் தெரியும் )