செந்தமிழ்

Saravanan
ஜூன் 26, 2010 10:49 முப
முதல் தமிழே முத்தமிழே _ ‍‍ எம்மை
செம்மைப் படுத்தும் செந்தமிழே!
கோவையில் உன‌க்கு செந்தமிழ் மாநாடு ‍ _ ஆனால்
எனக்கில்லை ஒரு வீடு!
எம்மை அழிக்க‌ துணை புரிந்தவ‌ன் _ உ‌னக்காக‌த்
தன்னை செம்மைப் ப‌டுத்தும் செம்மொழி மாநாடு!
க‌விப் பாடும் க‌வித் த‌மிழே ‍_ யாம்
க‌னைப்ப‌து உனக்கு கேட்க‌லையோ!
தேன் சுர‌க்கும் தேன‌முதே ‍_ எம்
தேக‌ம் பாடும் பாட‌ல் கேட்க‌லையோ!
யாம் எம் ம‌ண்னை விட்டுச் சென்றாலும் _ யாம்
உன்னை ம‌றந்ததில்லை ‍_ நீ
ஏன் மறந்தாய் என்னை என் மறத் த‌மிழே!

சரவணன்
புலித்தமிழன்.