Rabit

sundar
May 30, 2010 03:04 பிப

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த முயல் 1 கிலோ
இஞ்சி விழுது 2 தேக்கரண்டி
பூண்டு விழுது 3 தேக்கரண்டி
மஞ்சள்தூள் தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
சிறியவெங்காயம் 15 அரைத்தது ஒரு கப்
மட்டன் மசாலா/சிக்கன் மசாலா 40 கிராம்
கொத்த மல்லி தூள் 25 கிராம்
கிராம்பு 2
பட்டை சிறுதுண்டு
கொத்தமல்லித்தழை சிறிது
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையான அளவு


தயாரிக்கும் முறை

சுத்தம் செய்த முயல் கறியினைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பூ,கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.
பிற்கு இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு வதக்கி,
அரைத்து வைத்திருக்கும் சிறியவெங்காயம் போட்டு லேசாகப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிற்கு முயல் கறியினை போட்டு மஞ்சள்தூள், மட்டன் மசாலா/சிக்கன் மசாலா, கொத்த மல்லி தூள் போட்டு தேவையான அளவு தண்ணீர்,உப்பு சேர்த்து கிளறவும். மசாலா கறியில் வெந்த உடன்
கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறலாம்.

சாதம், சப்பாத்தி, பரோட்டா விற்கு சேர்த்து சாப்பிடலாம்.