ஜென்

karthik
May 12, 2010 06:21 பிப
ஒரு ஜென் துறவியும், அவரது சீடரும் காரில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்கிறார்கள். நீண்ட நெடிய சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது சீடருக்கு ஒரு சந்தேகம். குருவிடம் கேட்கிறார் ‘இந்தச் சாலை எங்கேப் போகிறது?’ என்று. குரு பதில் சொல்லவில்லை. இன்னமும் கொஞ்ச தூரம் பயணிக்கிறார்கள். வந்த பாதையை திரும்பி பார்க்கும் சீடருக்கு இன்னொரு சந்தேகம் வருகிறது. இப்பொழுது குருவிடம் கேட்கிறார். ‘இந்தச் சாலை எங்கிருந்து வருகிறது?’. குரு மௌனமாக இருக்கிறார். சட்டென சீடருக்கு ஞானோதயம் பிறக்கிறது. குருவிடம் சொல்கிறார் ‘இந்தச் சாலை எங்கிருந்து வருகிறதோ, அங்கேயேதான் போகிறது’. இதைக் கேட்டவுடன் ஜென் குரு சீடரை குண்டுகட்டாக தூக்கி காரிலிருந்து கீழே போட்டுவிடுகிறார்.