(நான் படித்து ரசித்த கவிதை) காத்திருக்கிறேன்!

Anandamari
May 08, 2010 12:00 முப
நீ வரும்
பேருந்தை
எதிர்பார்த்துக்
காத்திருக்கையில்...


* கடலைக்காரன்...
ஐஸ்காரன்...
வெள்ளரிக்காரன்...
தர்பூசணிக்காரன்...
தண்ணீர் பாக்கெட்காரன்...


* பாப்கார்ன்காரன்...
பிச்சைக்காரன்...
ஆட்டோக்காரன்... என
ஈயாய் மொய்த்த
இத்தனை, 'காரன்'களுக்கும்


'இல்லை... வேண்டாம்...'
என்ற... அவர்கள்
விரும்பாத பதில் சொல்லி...


* மணி என்னப்பா...
இந்த பஸ் போயிடுச்சா...
அந்த பஸ் போயிடுச்சா...
வருமா... வராதா...
கேட்டவர்க்கெல்லாம்
சரியாகவோ... தவறாகவோ
ஆறுதல் பதில் சொல்லி...


* காத்திருக்கிறேன்...
காத்திருக்கிறேன்...
நீ வரும்
பேருந்திற்காக
நொடிக்கொரு தரம்
கடிகாரத்தைப் பார்த்தபடி...
நீண்ட நேரம்
நிழற்குடையின்
கடைசி ஓர கம்பத்தில்
உன்னுடனான
காதல் நினைவுகளுடன்
என்னையும் சாய்த்தபடி...!


* மேலும் சிலரும்
காத்திருக்கின்றனர்...
என்னைப் போலவே
எவர் எவரையோ
எதிர்பார்த்து...


* இப்படியும்
இருக்கலாம்...
ஆண்பால்
பெண்பாலையும்;
பெண்பால்
ஆண்பாலையும்
எதிர்பார்த்து
காத்திருக்கலாம்!