Anonymous's படம்


அவனது நிறைகள் ஈர்க்க
என்மனம் அதனுள் லயிக்க
விரும்பி அவனை நோக்கி
நகர ஆரம்பித்த வேளையில்
நெருங்கி வந்திருந்தான் இவன்

இவனது அருகாமையில்
அவனது குறைகளும்
இவனது நிறைகளும்
பெரியதாய் உருவெடுக்க
இவன் இருக்கும் திசையில்
திரும்பியிருந்தேன் நான்

அருகே அமர்ந்து
அவனது குறைகளை
இவனிடம் எடுத்து
உரைக்கும் நேரத்தில்
உடைகிறது கவனம் எனக்கு

’அட....தொலைவில்
வடிவாய் யார்அது ?’

சிதறிய எண்ணம் உதறி
ஒரு நொடியில் மீண்டு
இவனிடத்தில் மீண்டும்
நெருங்கிய நான்
மறு நொடியில்
உறைந்துபோகிறேன்

மெதுவாக ......
அவனது சாயலுக்கு
மாறிக் கொண்டிருக்கிறான்
இவனும்..............!

.

0
Your rating: None

கருத்துகள்

chandru2110's படம்

கடவுளே , இது மாதிரி நல்ல


கடவுளே , இது மாதிரி நல்ல கவிதைகளை வேகமாக புரிந்து கொள்ள தமிழறிவை கொடு.


சந்துரு


kumaran's படம்

mmmmm......puriyiradhu konjam


mmmmm......puriyiradhu konjam kastamdhan....


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


annaa's படம்

நல்ல தமிழ்க்கவிதை நண்பரே.!


நல்ல தமிழ்க்கவிதை நண்பரே.!


annaa