காளான் சூப்

ஜோஸ்
மார்ச் 05, 2010 07:15 பிப

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்:

காளான் - ஒரு க‌ப்
எலுமிச்சைச்சாறு - ‌சி‌றிது
கரம் மசாலா - அரை தே‌க்கர‌ண்டி
வெங்காயம் - 1
நெய் - 2 தே‌க்கர‌ண்டி
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

தயாரிக்கும் முறை

செய்முறை:

கொதிக்கும் வெந்நீரில் காளானை போட்டு, சிறிது நேரம் கழித்து வடிகட்டி‌ வை‌க்கவு‌ம்.

பின் சிறிதாக வெட்டிக் கொண்டு அதனை எலுமிச்சைச் சாறில் ஊற வைக்கவும்.

பொடியாக நறுக்கிய வெங்காயத்தை நெய்யில் வதக்கி, எலுமிச்சைச்சாற்றில் ஊற வைத்த காளான், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் விட்டு மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

வெந்ததும் அரிசிமாவை கரைத்து இதில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

பரிமாறும் போது தேவையான அளவு மிளகுத்தூள், உப்பு சேர்த்து பரிமாறவும். சுவையான, சூடான காளான் சூப் தயார்!