மீன் சூப்

ஜோஸ்
மார்ச் 05, 2010 05:32 பிப

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்:

‌மீ‌ன் துண்டுகள் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 தே‌க்கர‌ண்டி
கரம் மசாலா - 1 தே‌க்கர‌ண்டி
புளி - நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு
சோள மாவு - 1 தே‌க்கர‌ண்டி
மஞ்சள் தூள் - 1 ‌சி‌ட்டிகை
உப்பு - தேவையான அளவு
பட்டை, லவங்கம் - ‌சி‌றிது

தயாரிக்கும் முறை

செய்முறை:

புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.

பட்டை, லவங்கம் தவிர மீதி அனைத்தையும் பு‌ளி‌க் கரைச‌லி‌ல் கலந்து கொண்டு இந்தக் கலவையில் மீன் துண்டங்களைப் போட்டு ஊற வைக்கவும்.

ஊறிய மீனை எடுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். மீன் வெந்ததும் தண்ணீரை வடித்து அதில் தாளித்த பட்டை, லவங்கத்தை போட்டு கொதிக்க வைக்கவும்.

‌மீ‌ண்டு‌ம் மீனை இதன் மேல் போட்டு கொத்துமல்லித் தழையைத் தூவவவும்.

மீன் சூப் தயார்!