கீரை வடை

சச்சின்
பிப்ரவரி 15, 2010 09:27 பிப

தேவையான பொருட்கள்


* பச்சரிசி மாவு - அரை படி
* முருங்கைக்கீரை - 25 கொத்து
* மிளகாய் தூள் - 3/4 மேசைக்கரண்டி
* மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
* சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
* உப்பு - 1 1/2 தேக்கரண்டி
* எண்ணெய் - ஒரு கப்

தயாரிக்கும் முறை

பச்சரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு எடுத்து தண்ணீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்தவும். அதிக நேரம் உலர்த்தாமல் அரிசியை கையில் எடுத்து பார்த்தால் கையில் ஒட்டாமல் இருக்கும் வரை காய்ந்தால் போதும். இந்த அரிசியை மிஷினில் கொடுத்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
step 1
முருங்கைகீரையை சுத்தம் செய்து ஆய்ந்து தண்ணீரில் போட்டு அலசிக் கொள்ளவும்.
step 2
வாணலியில் அலசிய கீரையை போட்டு மேலே சிறிது தண்ணீர் தெளித்து 2 நிமிடம் பிரட்டி விடவும். இப்படி ஒரு முறை செய்தால் தான் மாவுடன் கீரை சேரும். பின்னர் எடுத்து சிறிது நேரம் ஆற வைக்கவும்.
step 3
ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
step 4
பிறகு வதக்கி ஆற வைத்த கீரையை மாவில் சேர்த்து அரை கப் தண்ணீரை தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
step 5
ப்ளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவிக் கொண்டு ஒரு தட்டில் வைத்து பிசைந்த மாவை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து தட்டவும். மிகவும் மெல்லியதாக தட்ட வேண்டாம்.
step 6
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தட்டி வைத்திருக்கும் வடையை போட்டு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் பொன்னிறமாக எடுக்கவும்.
step 7
கீரை வடை தயார். சாப்பிட நன்கு மொறு மொறுவென்று இருக்கும். மாலை நேர சிற்றுண்டியாக செய்துக் கொடுக்கலாம்.