தை பொங்கல் சிறப்பு - சவ்வரிசி பொங்கல் பாயாசம்

வினோத் கன்னியாகுமரி
ஜனவரி 12, 2010 12:17 பிப

தேவையான பொருட்கள்

சவ்வரிசி – 300 கிராம்
வெல்லம் – 200 கிராம்
பால் – 200 மி.லி
நெய் – 50 கிராம்
முந்திரி பருப்பு – 10
கசாகசா(உலர்ந்த திராட்சை) – 10
ஏலக்காய் – 5, 6 லேசா பொடிச்சுக்கோங்க

தயாரிக்கும் முறை

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சவ்வரிசியை போடவும்.

சவ்வ‌ரி‌சி நன்றாக வெந்ததும் ஏலக்காய் மற்றும் வெல்லத்தை உடைத்து போட்டு கிளறவும்.

சவ்வ‌ரி‌சி ந‌ன்கு கெ‌ட்டியாக ‌வ‌ந்‌ததும் பாலையும், நெய்யையும் சேர்க்கலாம்.

முந்திரி, திராட்சையை நெய்யில் பொ‌ன்‌னிறமாக வறுத்து சே‌ர்‌க்கவு‌ம்.

சவ்வரிசி பொங்கல் தயா‌ர்.

- அடி‌யில் பி‌டி‌க்காம‌ல் கிளறிக்கொண்டிருக்க வேண்டும்.