kavidhaiKkaadhalan, கற்பனைத்திருடன் மற்றும் 3 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
கற்பனைத்திருடன்
ஆகஸ்ட் 23, 2012 02:02 பிப
அடிக்கடி யாரையோ தேடுவதாய் பாவனை கொள்கையில்  நீ  என்னைத்தான் தேடுகிறாய்  என்று நானும் பாவனித்து வருகையில்  கோபத்திற்கான பாவனையும்  விலகி போகையில்  தேடுதலின் ...
கற்பனைத்திருடன்
கற்பனைத்திருடன்
நான்
குழந்தையாய் வாசித்த முதல் வார்த்தை
'அம்மா'
என் உயிர் கொடுத்த அச்சொல்லுக்கு
உருவகித்தாய்
அகரம் முதலாய்

எண்ணங்களை பகுத்தறியா
வயதில்
எண் வாய்ப்பாடும்
வண்ணங்களை பிரித்தறியா
எனக்கு
வண்ணங்களையும்
பூசியுற்றாய்


உண்ணும் உணவின் பெயர் அறியா
எனக்கு
"பகுத்துண்டு ஓம்புதலை"
ஊட்டிவித்தாய்

எத்துனை பிள்ளைகளாயுனும்
உமக்கு மாட்டும்
ஓர் பிள்ளைதான்

சண்டையிட்டு சட்டைக்கிழிந்து
நிற்கையில்
சமாதானம் பேசி சமத்துவத்தை
தைதுக்கொடுத்தாய்

வாழ்வின் எல்லைவரை பயணிக்கும்
பகுத்தறிவை போதிக்கும்
"பள்ளித்தாய்"

மருத்துவனாய்,
பொறியாளனாய்,
அரசியலனாய்,
உன்னைப்போல ஒருவனாய்
உருவகிக்கும் உமக்கு
வாழ்த்துக்கள்!
கற்பனைத்திருடன்
கற்பனைத்திருடன்
பார்த்தேன் பார்த்தாய்
நகைத்தேன் நகைத்தாய்
விழுந்தோம்
அலைந்தோம்
திரிந்தோம்
இணைந்தோம்
பிறப்பித்தோம்
நீ நானாய்
நான் நீயாய்
வளர்த்தோம்
இளைத்தோம்
பிரிந்தாய்
அழுதேன்
எடுப்போம்
மீண்டும் ஒரு ஜென்மம்
கற்பனைத்திருடன்
கற்பனைத்திருடன்
உனக்கான அடையாளங்களை
எனக்காக நீயும்
எனக்கான அடையாளங்களை
உனக்காக நானும்
விட்டுக்கொடுதலில் வளர்கிறது
உனக்கும் எனக்கும் இடையேயான
காதல் .
மேலும் தரவேற்று