மொழியற்றவள் and கவி அறியான் liked this
கவி அறியான்
ஜூலை 13, 2019 12:16 முப
பட்டதாரி.....   அன்று  ஒருநாள் இரவில் உறவும் நிலவும் காவல் காத்து நிற்க -- இரு உயிர்கள் உல்லாச உலகத்தில் சுற்றித்திறிந்தனர்!!   நிலவு கறையேற வெட்கம் குறையாமல் குணிந்த தலை நிமிராமல் கதவின் ...
கவிதையின் கைபிள்ளை இதில் கருத்துரைத்துள்ளார்
பிரபு, மொழியற்றவள் மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்
கவி அறியான்
ஜூலை 13, 2019 12:16 முப
விசிறிப்பெண்ணவளே விந்தைக்கண்கொண்டு என்னைக் கொள்பவளே.....  உன் கண்கள் என்னைச்சிறைப்பிடிக்கும் என்றோ கண்ணாடியுடன் என்னைக்கடந்து செல்கிறாய்...  உன் நீளக்கூந்தளில் இடம் தாராயோ நான் பூவினமாய் மாறி அழகு ...
மொழியற்றவள் இதை விரும்புகிறார்
கவி அறியான்
ஜூலை 13, 2019 12:14 முப
நீ பெய்ததோ ஒரு சில துளிகள் தான் ஆனால்   இங்கு     ஆனந்தமோ  பல ஆயிரம் நெஞ்சங்களில் ! உன்னை வேண்டி தவம் இருந்தாலும் நீ  வருவதே இல்லை நீயாக நினைக்கும் வரை. உன் நண்பனை (மரங்களை) தண்டிததால் என்னவோ நீ ...
கவி அறியான்
ஜூலை 13, 2019 12:10 முப
ஆண்-பெண் நட்பு தயக்கத்தோடு ஆரம்பிக்கும் முதல் உரையாடல். பயத்தோடு பகிர்ந்து கொள்ளப்படும் அலைபேசி எண்கள். அவள் தவறாக எண்ணிவிடுவாளோ?-என்று யோசித்து,யோசித்து பேசும் தருணங்கள். காதல்,கீதல் என ...
கவி அறியான் இதில் கருத்துரைத்துள்ளார்
கவி அறியான் இதை விரும்புகிறார்
கவி அறியான்
கவி அறியான்
ஆண்-பெண் நட்பு

தயக்கத்தோடு
ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்.

பயத்தோடு
பகிர்ந்து கொள்ளப்படும்
அலைபேசி எண்கள்.

அவள் தவறாக
எண்ணிவிடுவாளோ?-என்று
யோசித்து,யோசித்து
பேசும் தருணங்கள்.

காதல்,கீதல் என
உளறுவானோ?-என்று
குழப்பத்தோடு
பேசும் ஆரம்பக்காலங்கள்.

புரிதல் தொடங்கும்
நேரத்தில் தானாக
மலர ஆரம்பிக்கும்
நட்பு மலர்.

புரிந்து கொண்ட பின்,
ஆண்-பெண் வித்தியாசத்தை
காணாமல் ஆக்கும்
நட்பின் ஆழம்.

தோல்விகண்டு துவலுகையில்
புதுத்தெம்பூட்டி,அடுத்த
முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள்
அவனை அவன் தோழி.

ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்,பெண்மை மாறாமலும்,
வாழ வழிகாட்டுவான்
அவளுக்கு அவள் தோழன்.

முடிவில்லா முடிவில்-நட்பு
வளர்ந்து நிற்கும்?
புரிந்து இருக்கமாட்டார்கள் என்னை,
என் தோழியை/நண்பனை
விட வேறு யாரும் நன்றாக
என்னும் ரீதியில்...!
வளரட்டும் இதுபோல்
ஆரோக்கியமாக
ஆண்-பெண் நட்பு.
இறுதிவரை நட்பு மாறாமல் வாழ்ந்த,வாழும்
அனைத்து ஆண்-பெண் நட்பு நெஞ்சகளுக்கும்
இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன்.
மேலும் தரவேற்று