malar manickam, கார்முகில் மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்
கார்முகில்
ஜனவரி 20, 2017 10:47 பிப
முகநூலின் முகவரியில் முழுமையான முகவுரையில் முன்னின்ற அனைவரையும் முழுமனதாய் இணைய வைத்தது ஜல்லி கட்டு கட்டாத காளையரையும் கள்ளமில்லா கன்னியரையும் கரையோரம் தோழா்களாய் கதைக்க வைத்த ஜல்லி கட்டு கலாம் ஐயா ...
கவிதையின் கைபிள்ளை இதில் கருத்துரைத்துள்ளார்
கவிதையின் கைபிள்ளை இதை விரும்புகிறார்
கார்முகில்
டிசம்பர் 06, 2016 07:09 பிப
2016 ஜனவரி இடைநில்லா பேருந்தில் தினமும் இனிதான அலுவலகப் பயணம் அரைமணி நேர பயணத்திலும் அறிமுகமில்லா தோழிகள் கூட அறிமுகமாகி அளவளாவிய நிமிடங்கள் அலுவலக அவசரத்திலும் அசைப்போட்ட அன்றாட ...
pandima இதை விரும்புகிறார்
கார்முகில்
டிசம்பர் 06, 2016 07:04 பிப
பால்நிலா இன்று படுத்து உறங்குகிறது சந்தணப்பேழையில் சலனமில்லாமல் சரித்திரம் படைத்த சாதனைப் பெண் இன்று சயனித்திருக்கிறது சமுத்திரக்கரையில் . .
கா.உயிரழகன், கார்முகில் மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
கா.உயிரழகன், கவிதையின் கைபிள்ளை மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்
கார்முகில்
கார்முகில்
சிறகுகளை விரிக்கிறேன்
சிறகடித்துப் பறக்கிறேன்
சிந்தனையை திறக்கிறேன்
சிரித்துக்கொண்டே கடக்கிறேன்
சில காலம் பறவையாய்

அதிகாலை அழகை
அதிசயித்து வியக்கிறேன்
அரிதாரம் பூசாத
முகங்களையே பார்கிறேன்
அழகான முகங்களுக்குள்
அழகில்லா அழுக்குகள்
அழுக்கான முகங்களுக்குள்
அன்பான அழகுகள்
ஆதவனின் அரவணைப்பில்
ஆனந்த குளியலிடும்
அழகு நிலா
தொடுவானம் கூட
தொட்டு விடும்
தூரம் தான்
தொட நினைக்கும் வேளையில்
தொடராமல் தவிர்கிறேன்
குயிலாக இருக்கிறேன்
கூவாமல் நிற்கிறேன்

கிளியாக பறக்கிறேன்
கிளைகளிலே நிற்கிறேன்
கிள்ளை மொழி பேசும்
எனக்கு
மழலை மொழி
தேவையில்லை
மயிலாக மாறினேன்
மலைகளிலே நிற்கிறேன்
மழை வீசும் மாலையிலே
மனம்போல ஆடினேன்
சிட்டுக்குருவியாய்
சிறகடித்து பறக்கிறேன்
சிறுதானியத்தையே
சி்ந்தி சிந்தி சுவைக்கிறேன்
தூக்கனாங்குருவியாய்
தூங்கி தூங்கி கட்டினேன்
தொங்குகின்றதிராட்சை போல
தூக்கிலிட்ட கூட்டினை
பூக்களின் வாசத்தை
புதிதாக உணா்கிறேன்
பட்டாம்பூச்சியாய்
பறந்துபறந்து
நுகா்கிறேன்
சில்வண்டாய் மாறியே
சிறுபூவை ருசிக்கிறேன்
ரீங்கார பாட்டிலே
புதுமெட்டை ரசிக்கிறேன்
மரங்கொத்திப் பறவையாய்
மனங்கொத்தி திரிகிறேன்
மனம்பிடித்த வரிகளையே
மரங்களிலே செதுக்கினேன்
காகமாக மாறினேன்
கவலைகளை மறக்கிறேன்
கடுகளவு உணவைக்கூட
கரைந்து கரைந்து உண்கிறேன்
பருந்தாக மாறினேன்
பறந்து பறந்து செல்கிறேன்
பால்நிலவை தொடுவதற்க்கு
பயணம் ஒன்றை வகுக்கிறேன்
ஆகாய விமானத்தை ஆசையாக
தொடுகிறேன்
ஐயோ
பரிதாபமாக வந்து
படுக்கையிலே விழுகிறேன்
ஓ இது கனவா………………………………
விடிஞ்சிடிச்சா
கீக்கீ கூக்கூ
இனிய காலை வணக்கங்கள்
கணேசன் and பூங்கோதை செல்வன் commented on this
பூங்கோதை செல்வன், தமிழ் நண்பர்கள் மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்
கார்முகில்
October 14, 2016 05:22 முப
நேற்று சில்லென்ற தென்றலுடன் சிலுசிலுவென வந்தாய் சின்ன சி்ன்ன தூறலால் ஜிலுஜிலுக்க வைத்தாய் வானம் பார்த்த என்னை வசந்தமாக மாற்றினாய் வாடைக் காற்றை வீசியே வசீகரித்து கொன்றாய் வடகிழக்கு ...
மேலும் தரவேற்று