கா.உயிரழகன் and pandima commented on this
கா.உயிரழகன் and pandima liked this
Arun Abhi
Arun Abhi
ஆகாச நிலவுதான் அழகாத் தெரியல
ஆணிமுத்து அதுவுமே அழகாத்தெரியலே
உன்னப் போல அழகுதான் ஒண்ணுமில்லே ஒலகிலே
ஒட்டு மொத்த அழகையும் கொண்ட நீ என் உசுருலே
சாமி கொடுத்த வரமே நீதானே எனக்கு ராசா
நின்னு வாழ்ந்து காட்ட வேணும்
இந்தப் புவியில் ரொம்பப் பெருசா
ஆகாச நிலவுதான் அழகாத் தெரியல
ஆணிமுத்து அதுவுமே அழகாத்தெரியலே
சூரியனைக் கேளு வாங்கி நான் தருவேன் சந்திரனைக் கேளு கொண்டுதான் தருவேன்
வங்கக் கடலதை சின்னக் குவளையில் கொண்டு வரச் சொல்லு செஞ்சிடுவேன்
சிங்கம் சிறுத்தையை ஒத்த அடியிலே கொன்னு வரச் சொல்லு செஞ்சிடுவேன்
உலகே அழிஞ்சாலும் ஒனை நான் காத்திடுவேன்
என்னோட பெருமை என்ன ஒன் உருவில் பாத்திடுவேன்
ஆகாச நிலவுதான் அழகாத் தெரியல
ஆணிமுத்து அதுவுமே அழகாத்தெரியலே
எப்பவுமே நீதான் என்னோட ஆவி
பட்டம் பல வாங்கி ஆகணும் மேதாவி
ஒன்னை விட ஒரு சொத்து சுகம் இந்த மண்ணில் இல்லையினு சொல்லிடுவேன்
கண்ணு மணியென ஒன்னை நெனைச்சு நான் கையில் எடுத்து தான் கொஞ்சிடுவேன்
எதையும் ஒனக்காக சுளுவா செஞ்சிடுவேன்
ஒத்தை நொடி பிரியச் சொன்னா இறந்தே போயிடுவேன்
ஆகாச நிலவுதான் அழகாத் தெரியல
ஆணிமுத்து அதுவுமே அழகாத்தெரியலே
உன்னப் போல அழகுதான் ஒண்ணுமில்லே ஒலகிலே
ஒட்டு மொத்த அழகையும் கொண்ட நீ என் உசுருலே
சாமி கொடுத்த வரமே நீதானே எனக்கு ராசா
நின்னு வாழ்ந்து காட்ட வேணும்
இந்தப் புவியில் ரொம்பப் பெருசா
சாமி கொடுத்த வரமே நீதானே எனக்கு ராசா
நின்னு வாழ்ந்து காட்ட வேணும்
இந்தப் புவியில் ரொம்பப் பெருசா
மேலும் தரவேற்று