கண்ணதாசன்

URI: http://tamilnanbargal.com/node/343791 கருத்துகள்1018 views

கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்.

இவரது இயர்பெயர் முத்தையா. இவர் கண்ணதாசன், காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி என்ற புனை பெயர்களில் தன் படைப்புகளை எழுதியுள்ளார். எனினும் கண்ணதாசன் என்ற பெயரே நிலைத்து நிற்கிறது.

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், புதினங்கள், கட்டுரைகள் என பல படைப்புகளை எழுதியிருக்கிறார்.

சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.

சாகித்திய அகாதமி விருது பெற்றவர்

இவரது முதல் பாட்டு "கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே" என்று `கன்னியின் காதலியில்’ வெளிவந்தது .
இவரது கடைசிப் பாட்டு மூன்றாம் பிறை படத்தில் வெளிவந்த, `கண்ணே கலைமானே’ என்பதாகும் .

குடும்ப வாழ்க்கை: 

கண்ணதாசனின் தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார்.

சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார்.

இவரது முதல் மனைவி பெயர் பொன்னம்மா. இரண்டாம் திருமணம் பார்வதி என்பவரை செய்து கொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள் பிறந்தன.
ஐம்பதாவது வயதில் வள்ளியம்மையை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்தவர் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்

பொது வாழ்க்கை: 

சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.

இவர் தன் வாசகர்களுக்குச்சொல்லும் அறிவுரை
"புத்தங்களைப் பின்பற்றுங்கள்; அதன் ஆசிரியரை (என்னை) பின்பற்றாதீர்கள்!’

திருக்கோஷ்டியூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியுற்றார். அதன் பிறகு போட்டியிடவில்லை. இவருக்கு ஈ.வெ. கி.சம்பத். ஜெயகாந்தன், சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் நெருக்கமான நண்பர்கள்.

இவர் அதிகமாக மது விரும்பி. அதே போல விலை மாது விரும்பியும். இதை இவரே ஒப்புக்கொண்டு தன் தவறுகள் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு உதாரணம் என்பார்.

இவர் `பராசக்தி’, 'ரத்தத்திலகம்’, 'கறுப்புப்பணம்’, 'சூரியகாந்தி’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது.
இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய நிகழ்வுகள்: 

உடல்நிலை சரியில்லாததால் 1981, ஜூலை 24 ல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20 இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22 இல் எரியூட்டப்பட்டது.

இவர் இளம் வயதில் நாத்திகனாக இருந்து இந்து மதத்திற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியுள்ளார். பின்பு மனம் திருந்தி ஆன்மிகவாதியாக மாறினார். இராமாயணம் என்ற இலக்கியத்தைப் படித்ததாலேயே இந்து மதத்தின் சிறப்பை உணர முடிந்தது என்று அவரே கூறுகிறார்.

படைப்புகள்: 
 1. இயேசு காவியம்
 2. அர்த்தமுள்ள இந்து மதம்
 3. திரைப்படப் பாடல்கள்
 4. மாங்கனி

கவிதை நூல்கள்

 1. கண்ணதாசன் கவிதைகள்
 2. பாடிக்கொடுத்த மங்களங்கள்
 3. கவிதாஞ்சலி
 4. தாய்ப்பாவை
 5. ஸ்ரீகிருஷ்ண கவசம்
 6. அவளுக்கு ஒரு பாடல்
 7. சுருதி சேராத ராகங்கள்
 8. முற்றுப்பெறாத காவியங்கள்
 9. பஜகோவிந்தம்
 10. கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்

புதினங்கள்

 1. அவள் ஒரு இந்துப் பெண்
 2. சிவப்புக்கல் மூக்குத்தி
 3. ரத்த புஷ்பங்கள்
 4. சுவர்ணா சரஸ்வதி
 5. நடந்த கதை
 6. மிசா
 7. சுருதி சேராத ராகங்கள்
 8. முப்பது நாளும் பவுர்ணமி
 9. அரங்கமும் அந்தரங்கமும்
 10. ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
 11. தெய்வத் திருமணங்கள்
 12. ஆயிரங்கால் மண்டபம்
 13. காதல் கொண்ட தென்னாடு
 14. அதைவிட ரகசியம்
 15. ஒரு கவிஞனின் கதை
 16. சிங்காரி பார்த்த சென்னை
 17. வேலங்காட்டியூர் விழா
 18. விளக்கு மட்டுமா சிவப்பு
 19. வனவாசம்
 20. அத்வைத ரகசியம்
 21. பிருந்தாவனம்

வாழ்க்கைச்சரிதம்

 1. எனது வசந்த காலங்கள்
 2. எனது சுயசரிதம்
 3. வனவாசம்

கட்டுரைகள்

 1. கடைசிப்பக்கம்
 2. போய் வருகிறேன்
 3. அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
 4. நான் பார்த்த அரசியல்
 5. எண்ணங்கள்
 6. தாயகங்கள்
 7. வாழ்க்கை என்னும் சோலையிலே
 8. குடும்பசுகம்
 9. ஞானாம்பிகா
 10. ராகமாலிகா
 11. இலக்கியத்தில் காதல்
 12. தோட்டத்து மலர்கள்
 13. இலக்கிய யுத்தங்கள்
 14. போய் வருகிறேன்

நாடகங்கள்

 1. அனார்கலி
 2. சிவகங்கைச்சீமை
 3. ராஜ தண்டனை

விளக்கவுரைகள்

 1. பகவத் கீதை விளக்கவுரை
 2. அபிராமி அந்தாதி விளக்கவுரை

இவரது படைப்புகளில் தமிழ் இன, மொழி உணர்வு, திராவிட இயக்க உணர்வு, தமிழர் வரலாறு, இந்தியத் தேசிய உணர்வு, தத்துவம், இந்து சமயத் தத்துவம் போன்றவைகளைக் காண இயலும்.

சாதனைகள்: 

கோவை கண்ணதாசன் கழகம் கண்ணதாசன் இலக்கிய விருதை எழுத்தாளர்களுக்கு வழங்கி வருகிறது.

7.5
Your rating: None Average: 7.5 (4 votes)

கருத்துகள்

புதிய கருத்தை சேர்

To prevent automated spam submissions leave this field empty.