கண்டாக்ட் லென்ஸ் உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவைகள்
- கண்ணை தெரியாத்தனமாக கசக்கிவிடக்கூடாது
- தூங்கும் போது, குளிக்கும் போது இதை அணியக்கூடாது
- லென்ஸை அதை மிக தூய்மையாக வைத்திருக்க வேண்டும்
- அதற்கான திரவத்தில் கழுவி கண்ணில் அணிய வேண்டும்
- முதலில் கொஞ்ச நேரம் உறுத்துதல் இருக்கும், அதிக உறுத்துதல் இருந்தால் மருத்துவர் ஆலோசனைப்படி அதற்கான மருந்தை கண்ணில் விடலாம்
- லென்ஸில் பல வகை உள்ளது, தேவையான கண்ணாடி அணிவது போல மருத்துவர் அதற்கான லென்ஸை தருவார்.
- பஸ்ஸில் பிரயாணத்தின் போது ஜனனல் பக்கம் ஆகாது. முக்கியமாக கண்ணில் தூசு விழக்கூடாது. அல்லது பிரயாணத்தின் போது கழட்டி வைத்துவிட்டு பின்பு கண்ணை கழுவி அணிந்து கொள்ளலாம்.
- சிறிய கண்ணாடி கைவசம் வைத்திருந்தால் அதில் பார்த்து லென்ஸை சரிசெய்ய உதவும்.
- லென்ஸை கழுவும் போதும் அணியும் போதும் கை மிக தூய்மையாக இருக்க வேண்டும். முக்கியமாக கைகழுவும் இடத்தில் வைத்து லென்ஸை கழுவாதீர்கள். அது தவறி உள்ளே விழுந்துவிடக்கூடும்.
- அணியும் போது மடியில் தூய்மையான துணி போட்டுவிட்டு அணி்ந்தால் கை தவறிவிட்டால் கீழே விழாமல் துணியில் விழும்.
- அதிக வலி இருந்தால் கண் மருத்துவரை கண்டிப்பாக அணுகவும்.
(3 votes)
கருத்துகள்
தகவலுக்கு மிக்க நன்றி..
Submitted by Ragavan on புத, 14/07/2010 - 3:45am.
தகவலுக்கு மிக்க நன்றி..
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..








