ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் உடலில் சதை மிகுதியாய் இருக்கக் கூடிய முக்கியமான இடம், வயிறுதான், வயிறு பருத்துவிடப் பல காரணங்கள் இருக்கலாம். ஒன்று, பரம்பரையாக ஏற்படும் தொந்தி, இதன் மூலம் தொப்பை எனும் குறை உண்டாகலாம். வாயுத் தொல்லை காரணமாய்ச் சிலருக்கு வயிறு உப்பியிருக்கலாம். உடலுக்குப் பயிற்சிகள் ஏதும் தராமல் காரில் பயணம் செய்பவர்கள், உடலை வருத்தி வேலை செய்யாமல் நாற்காலியில் உட்கார்ந்தபடியே காலத்தைக் கழிப்பவர்கள், அதிகமாக ஓய்வு எடுப்பவர்கள் ஆகியோருக்கு வயிறு பருத்திருக்கலாம். நான்காவதாக, மது, மாமிசம், அதிகமாகச் சாப்பிடுவதாலும் வயிறு பெருக்கும். ஐந்தாவதாக, பிரசவம் ஆனபின் பெண்களுக்கு வயிறு பருத்துவிட வாயப்பிருக்கிறது. கைகால்கள் அழகாய் அமைந்துவிட்டு வயிறு மடடும் பருத்திருப்பது அழகாகவா இருக்கும்? மேலைநாடுகளில் இம்மாதிரி உடல்நலத்தில் ஆர்வம் காட்டாதவர்களைப் பார்ப்பது அரிது. இப்படி அதிகப்படியான சதைகளை வயிற்றிலிருந்து அகற்ற என்ன செய்யலாம்? இப்போது ‘லிப்போ சக்ஷன்’ எனும் காஸ்மடிக் சர்ஜரி மூலம் வயிற்றிலிருக்கும் அதிகப்படியான சதைகளை எடுத்துவிடுகிறார்கள். இது அனைவருக்கும் சாத்தியமா? பணம் படைத்தவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இயற்கை வைத்தியம் என்ற முறையில் அருகம்புல் சாறு, பூசணி, வாழைத்தண்டுச் சாறு ஆகியவற்றின் மூலமும் களிமண் குளியல், இடுப்புக் குளியல், முதுகுத்தண்டுக் குளியல் ஆகியவற்றின் மூலமும் எடை குறையச் சிகிச்சை கொடுக்கிறார்கள். யோகாப்பியாசம் செய்தல் மூலமும், உடற்பயிற்சிக் கருவிகளை உபயோகித்தல் மூலமும்கூட நீங்கள் உடலிலுள்ள அதிகப்படியான சதையைக் குறைக்கலாம். ஆக, இந்த எல்லா முறைகளினாலும் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாயப்பிருக்கிறது. அது நீடித்திருக்க வேண்டுமே? எந்த ஒரு சிகிச்சை முறையும் முடிந்தபின், மீண்டும் அந்தச் சதை நம் உடலில் சேராதவறு பார்த்துக் கொள்ளுதல் நமது கடமையல்லவா? வயிறு குறைய வீட்டிலிருந்தபடியே சில எளிய உடற்பயிற்சிகளையும், உணவுப் பழக்கங்களையும் மேற்கொள்ளலாம். புவனா HealthNattu MarundhuAged Persons Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 5777 views கருத்துகள் நல்ல தகவல் நல்ல தகவல் "கள்ளமில்லா உள்ளம் தைக்கும் முள்ளையும் ஏற்கும்" என்றும் நட்புடன், dharshi.http://siththarkal.blogspot.com/ Log in to post comments நன்றிதொப்பை குறைய யோகாவை நன்றி தொப்பை குறைய யோகாவை http://tamilnanbargal.com/node/8903 இங்கே காணலாம் வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments தங்கமான தகவல் |-) உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டெனத் தூங்குபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமிது! யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
நல்ல தகவல் நல்ல தகவல் "கள்ளமில்லா உள்ளம் தைக்கும் முள்ளையும் ஏற்கும்" என்றும் நட்புடன், dharshi.http://siththarkal.blogspot.com/ Log in to post comments
நன்றிதொப்பை குறைய யோகாவை நன்றி தொப்பை குறைய யோகாவை http://tamilnanbargal.com/node/8903 இங்கே காணலாம் வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
தங்கமான தகவல் |-) உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டெனத் தூங்குபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமிது! யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162