வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது முன்னோர் கருத்து. அதற்காகச் சும்மா சிரித்துப் பயனில்லை.
நகைச்சுவைப் படம் பார்த்தால் ஓரளவு நலம். சிந்திக்க வைக்கும் நகைச்சுவை சொல்லியோ கேட்டோ சிரித்தால் மிக்க நலம்.
உள்ளத்தில் வடுக்கள் ஓரளவு மறையவும் சோர்வுற்ற நரம்புகள் சுறுசுறுப்பு அடையவும் இவ்வாறான சிரிப்பு உதவுகிறது. உளத்தூய்மையும் நரம்புகளின் சுறுசுறுப்பும் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். இதனால் நோய்கள் வருவதை ஓரளவு தடுக்கலாம். 
(2 votes)





