yarlpavanan's படம்

நோய் ஒன்று வருமாயின் அதற்குப் பின்னாலே ஆயிரம் இருக்கும். அதனை அறியாமல் ஆச்சி சொன்னது, அப்பு சொன்னது, தம்பிக்கு இந்த மருந்து தான் கொடுத்தனாங்கள், தமிழ்வாணனின் செலவில்லாத மருத்துவம் பொத்தகத்தில் இருந்தது என்றெல்லாம் எமக்கு நாமே மருத்துவம் செய்தால் உண்மையான நோயை எந்தக் கடவுள் கண்டு பிடிப்பார்? ஒரு நோயைச் சுகப்படுத்தப் போய் பல நோய்களைச் சேகரித்தது போலவே தன்(சுய) மருத்துவத்தின் முடிவு அமையும்.
எனவே, நோய் வந்தால் மருத்துவரை நாடவும். நோயின் தோற்றம், நோயை விரட்டும் வழிகள், பக்க விளைவுகள் மற்றும் பின் விளைவுகள் அற்ற மருந்துகள், பாதுகாப்பு மதியுரை(ஆலோசனை) எனப் பலவற்றை அவரால் வழங்கமுடியும்.
முக்கிய குறிப்பு : மருத்துவரை நாடினால் போதாது மருத்துவருக்குப் பொய் சொல்லவும் கூடாது.
முடிவு : நோயைக் குணமாக்க விரும்பும் அனைவரும் இதனைப் பின்பற்றவும்! doctor

3
Your rating: None Average: 3 (1 vote)

கருத்துகள்

VISWAM's படம்

நல்லத்துதான், ஆனால்,


3

நல்லத்துதான், ஆனால், மருத்துவரிடம் போகவே பயமாக இருக்கிறதே!!!!!! இல்லாததுக்கெல்லாம் பரிசோதனை செய்துவா என்று வேண்டாத செலவுகளை ஏற்படுத்துகிறாரே. அதனால் சில சமயங்களில் பாட்டிவைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

yarlpavanan's படம்

நன்மைக்குத் தான், ஆனால்


தூதுவளை இலை, கொத்தமல்லி இரண்டையும் அவிச்சுக் குடிச்சால் தடிமன், காய்ச்சல் பறந்து போயிடும் என்பது பாட்டி வைத்தியம். இப்படிச் செய்தும் குறையவில்ல என்றால் மருத்துவரிடம்
செல்ல வேண்டும்.
பாட்டி வைத்திய காலத்தில் இன்றைய நோய்கள் இல்லை.
இன்றைய மருத்துவ(வைத்திய) காலத்தில் பாட்டி வைத்திய கால நோய்கள் இல்லை.
அறிவியல் வளர்ச்சி, செயற்கை உணவு என்பவற்றால் தோன்றும் நோய்களைக் குணப்படுத்த மருத்துவரை நாடித் தான் ஆகணும். பரிசோதனை முடிவுகள் நோயை அடையாளப்படுத்தவே. செலவுக்கு அஞ்சினால் அரச மருத்துவ மனையை நாடலாம்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil