தமிழ் நண்பர்களுடன் இணையுங்கள்...

இணைந்த பின் நீங்கள்

  1. இவரது பயனர் தகவல்களை பார்வையிடலாம்
  2. இவரை நண்பராக சேர்க்கலாம்
  3. இவருடன் அரட்டை மட்டும் தனிச்செய்திகள் பரிமாறிக்கொள்ளலாம்.

இன்னும் பல வசதிகளை பயன்படுத்துங்கள்...

பதிவு செய்க!

இவருடன் கடைசியாக இணைந்தவர்கள்

This user has no Friends added at this site!

Please Invite your Friend or add any existing members as your Friend.

நண்பர் செயல்கள்

vinoth's படம்

நேதாஜி ஆகஸ்ட் 18 அன்று தைவான் விமான விபத்தில் இறந்ததால் நேதாஜியின் நினைவு தினமாக சிலர் கருதுகிறார்கள். 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை தைவானில் எந்த விமான விபத்தும் ஏற்படவில்லை என தைவான் அரசே தெரிவித்திருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை நேதாஜிக்கு இறப்பே இல்லை. ஒரு நாளை நேதாஜியின் நினைவு தினமாக ஏற்பது அந்த போராளியே அவமதிக்கும் செயலே என நான் நினைக்கிறேன்.

vinoth's படம்

இனிய வாரம் இனிய நாள் அனைவருக்கும் இனிதாக அமையட்டும்

(இப்படி நாத்திகவாதிகள் வாழ்த்த முடியாது. ஏனென்றால் கடவுள் இல்லாதது போல, எதிர்காலம் கணிக்கப்படமுடியாதது அது எப்படி இருக்கும் என்று இப்போதே சொல்லவோ நம்பவோ முடியாது என்பது கொள்கை)

யாராவது நாத்திகம், வாழ்த்தினால் நீங்கள் தாராளமாய் கேள்வி கேட்கலாம். ஒருவரது வாழ்த்தால் எப்படி நிஜமாகவே வாழ்க்கை இனிதாகும், கண்ணுக்கு தெரியாத ஆசி எப்படி வாழ வைக்கும். அதை எப்படி நம்புகிறார்கள்? ஆசியை நம்பினால் கண்ணுக்குத்தெரியாத சக்தி இருப்பதை நம்பியதாக ஆகிவிடும். நாத்திக கொள்கையே அடிபட்டுப்போகும்.

vinoth's படம்

தமிழர்களை பிரிப்பதில் எதிரிகள் எப்போதுமே வெற்றிபெறுகிறார்கள்.
தமிழர்களை மதம் வைத்தும் திராவிடம் வைத்தும் ஈழத்தை வைத்தும் இந்தியாவை வைத்தும் கட்சிகளை வைத்தும் எப்போதுமே மிக எளிதாக எதிரிகள் பிரித்து விடுகிறார்கள்.
ஏனென்றால் தமிழர்களுக்கு ஆக்ரோஷ உணர்வு அதிகம். அதைத்தூண்டுவிடுவது மட்டுமே எதிரிகள் வேலை, மீதியை தமிழர்களே பார்த்துக்கொள்கிறார்கள்

vinoth's படம்

தமிழர்களுக்கு சொந்த மண் என்று எதுவும் கிடையாது.
"யாதும் ஊரே யாவரும் கேளீர். "
ஆனால் இதை தமிழர்களால் சொல்ல முடிகிறதே தவிர ஏற்க முடியாது.

இந்துமத கொள்கை படியும் யாருக்கும் சொந்தமல்ல இம்மண். யார் வேண்டுமானாலும் யாராகவும் எங்கேயும் பிறக்கலாம் என்பது கொள்கை. இவர்களாலும் சொல்ல முடிகிறதே தவிர நடைமுறையில் ஏற்றவர்கள் வெகு சிலரே.

vinoth's படம்

சரியான வழியில் தன்னுடைய மதத்தை பரப்பவோ கொள்கைகளை பரப்பவோ இந்திய நாட்டில் இதுவரை எந்த தடையும் கிடையாது. அப்படி இருக்கும் போது கிருத்துவமோ இசுலாமோ எந்த மதத்தவரும் வெளிநாட்டு கொள்கைகளை கொண்ட மார்க்சிசம் உட்பட எந்த கட்சியும் தன்னுடைய கொள்கைகளை பரப்பி மக்களை கவர்ந்து ஜனநாயகமுறையில் வெற்றி பெற்று இந்தியாவை ஆள முடியும் என்பது உண்மை. அப்படி இருக்கும் போது தன்னுடைய இனத்தவர் ஆட்சியில் தற்போது இல்லை என்ற ஒரே காரணத்துக்காக இந்தியா என்ற தேசத்தை திட்டிக்கொண்டிருப்பது கேவலமானது மட்டுமல்ல சிறுபிள்ளை அடம் போன்றது.

… மேலும் படிக்க

சரியான வழியில் தன்னுடைய மதத்தை பரப்பவோ கொள்கைகளை பரப்பவோ இந்திய நாட்டில் இதுவரை எந்த தடையும் கிடையாது. அப்படி இருக்கும் போது கிருத்துவமோ இசுலாமோ எந்த மதத்தவரும் வெளிநாட்டு கொள்கைகளை கொண்ட மார்க்சிசம் உட்பட எந்த கட்சியும் தன்னுடைய கொள்கைகளை பரப்பி மக்களை கவர்ந்து ஜனநாயகமுறையில் வெற்றி பெற்று இந்தியாவை ஆள முடியும் என்பது உண்மை. அப்படி இருக்கும் போது தன்னுடைய இனத்தவர் ஆட்சியில் தற்போது இல்லை என்ற ஒரே காரணத்துக்காக இந்தியா என்ற தேசத்தை திட்டிக்கொண்டிருப்பது கேவலமானது மட்டுமல்ல சிறுபிள்ளை அடம் போன்றது. இந்தியாவை திட்டினாலும், மேலே சொன்னதை சரியாக பயன்படுத்தி தமிழகத்தை ஆட்சி செய்த ஒரே கட்சி திமுக மட்டுமே திராவிட கொள்கை மட்டுமே. ஆனாலும் அந்த கொள்கையால் தமிழகத்தை மட்டுமே முழுமையாக ஆள முடிந்தது. ஏனென்றால் வட மாநிலத்தவர்களை (வடமாநில இசுலாமிய கிருத்துவ சீக்கியர் உட்பட) அனைவரையும் தமிழகத்தவர்களிடம் ஆரியம் உன் எதிரி என்று சொல்லிய திராவிடத்தால் வட மாநிலங்களை திராவிடம் என்ற கொள்கை கவர முடியவில்லை. மார்க்சிசம் தொழிலாளர்களை கைக்குள் போட்டுக்கொண்டு அவர்கள் மூலம் முன்னேறி வந்தது. ஆனால் அவர்களின் உண்மையானஆயுதம் ஏந்தும் மறுபக்கம் பலருக்கு பிடிக்கவில்லை என்பதால் ஜனநாயக நாட்டில் அதுவும் அவ்வளவாக எடுபடவில்லை. இந்தியாவை திட்டிக்கொண்டிருக்காமல் இந்திய மக்கள் அனைவரையும் கவரக்கூடிய கொள்கைகளை உருவாக்கினால் நீங்களும் இந்தியாவை ஆளலாம். அதை விட்டுவிட்டு இந்தியா என்ற நாட்டை திட்டாதீர்கள்.

எழுத ஆரம்பித்த, திராவிடம் எனும் கட்டுரையில் இருந்து ...