இந்திய 57வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புது டெல்லியில் இன்று தேர்வுக்குழுவின் தலைவர் திரு. ரமேஷ் சிப்பி இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
அமிதாப்பச்சன் - சிறந்த நடிப்பு:
ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு அவரது மகனுடன் சேர்ந்து நடித்த பால்கி(பாலகிருஷ்ணன்) இயக்கத்தில் வெளியான 'Paa' படத்தில் சிறந்து நடித்ததிற்காக 2009ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. அமிதாப்பிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைப்பது 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா - சிறந்த பின்னணி இசை:
மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் சரத் குமார் இணைந்து நடித்து மலயாளத்தில் வெளியான பழஸிராஜா படத்தில் இசையமைத்ததிற்காக இசைஞானி இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு இவ்விருது நான்காவது முறையாக கிடைத்துள்ளது.
பசங்க - சிறந்த தமிழ்த் திரைப்படம்
சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதை பசங்க படம் பெறுகிறது. இதில் நடித்த ஜீவா, அன்புக்கரசுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
பாண்டிராஜு - சிறந்த வசனகர்த்தா
பசங்க படத்தை இயக்கிய பாண்டிராஜு விற்கு சிறந்த வசனகர்த்தா விருது கிடைத்துள்ளது.
த்ரீ இடியட்ஸ் - சிறந்த பொழுது போக்கு திரைப்படம்:
அமிர் கான், மாதவன் நடித்த 'த்ரீ இடியட்ஸ்' இந்திப் படத்துக்கு சிறந்த பொழுது போக்கு திரைப்படத்துக்காக விருது கிடைத்துள்ளது.
குட்டி ஸ்ராங்கு - சிறந்தபடம், திரைக்கதை
மலையாளத்தில் வெளியான 'குட்டி ஸ்ராங்கு' படம், சிறந்த படத்திற்கான விருதையும், சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றுள்ளது.
அமித் திரிவேதி - சிறந்த இசைமைப்பு
சிறந்த இசையமைப்பாளருக்கான (பாடல்கள்) விருது தேவ் டி படத்துக்கு இசையத்த அமித் திரிவேதிக்குக் கிடைத்துள்ளது.
அனன்யா சாட்டர்ஜி - சிறந்த நடிகை
பெங்காலி மொழிப் படமான 'அபோ ஹவா' படத்தில் நடித்த அனன்யா சாட்டர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
ரிதுபர்னா கோஷ் - சிறந்த இயக்குனர்
இந்தப் படத்தை இயக்கி ரிதுபர்னா கோஷுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது.
வெல் டன் அபா - சமூக படம்
ஷ்யாம் பெனாகல் இயக்கத்தில் வெளியான 'வெல் டன் அபா' படம் சமூக அக்கறையை பிரதிபலிக்கும் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நிலாஞ்சனா - சிறந்த பின்னணி பாடகி
சிறந்த பின்னணி பாடகிக்கான விருது நிலாஞ்சனாவுக்குக் கிடைத்துள்ளது
ருபம் இஸ்லாம் - சிறந்த பின்னணி பாடகர்
சிறந்த பின்னணி பாடகருக்கான விருது ருபம் இஸ்லாமுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்வானந்த் கிக்கரேவ் - சிறந்த பாடலாசியர்
ஸ்வானந்த் கிக்கரேவுக்கு சிறந்த பாடலாசியருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.



