தமிழகத்தி்ல் மருத்துவ வசதிகள் உலக புகழ் அடைந்து வருவதால் இங்கே இருக்கும் போலி டாக்டர்களை களையெடுக்க வேண்டிது அரசின் கடமை ஆகும்.
அதன் படி தேடுதல் வேட்டையில் எம்பிபிஎஸ் படிக்காமலேயே ஊசி போட்டு சிகிச்சை அளித்து வந்த 171 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
தமிழகம் முழுவதும் சித்த வைத்தியம் உள்ளிட்ட சில பாரம்பரிய மருத்துவப் படிப்புகளை படித்துவிட்டு பலர் அலோபதி மருத்துவ முறையி்ல் ஊசி போட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சென்னை, காஞ்சீபுரம், திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை, நெல்லை, குமரி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்பட பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
நெல்லையில் 34 பேர்:
அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் தான் 34 பேர் பிடிபட்டனர். இவர்களில் பலர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை அளித்து வருபவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
திசையன்விளை, களக்காடு, கோவில்பத்தை, கீழப்பத்தை கிராமங்கள் மற்றும் நாங்குநேரி, வள்ளியூர், ஏர்வாடி ஆழ்வார்குறிச்சி, கீழ ஆம்பூர், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், முக்கூடல், புளியங்குடி, மூலக்கரைப்பட்டி ஆகிய ஊர்களில் பலர் கைது செய்யப்பட்டனர்.
இதில் 10 பெண்களும் அடங்குவர்.
குமரி மாவட்டத்தில் 3 போலி டாக்டர்கள் பிடிபட்டனர்.
பேச்சிப்பாரை கடம்பமூடு சந்திப்பில் கேரளாவைச்சேர்ந்த ஜோசப்(50) , குலசேகரத்தில் ஆஸ்டின் ராஜ் (49), மணவாளக்குறிச்சியில் எஸ்.எஸ். ராயன் (70) என்பவர்கள் பிடிபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 மட்டுமே படித்துவிட்டு, டாக்டர் தொழில் செய்து வந்த மாதம்மாள் (38), தர்மபுரிதொட்டம்பட்டியில் 2 பேர், சேலத்தில் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்துவிட்டு மருத்துவமனை நடத்தி வந்த தபரே ஆலம் (42) ஆகியோரும் கைதாயினர்.
மதுரை.
மதுரை மாவட்டம் மேலூரில் மூலம், பெளத்திரம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த ரஞ்சித் மோண்டல் (35) என்பவர் கைதானார்.
மேலும் மதார் (65) மற்றும் ராஜகோபால் (65) ஆகியோரும் கைதாயினர்.
அலங்காநல்லூரிலும் 3 பேர் கைதாயினர்.
கோவை.
கோவை ஈச்சனாரியை சேர்ந்த ரமா பூபதி (45) என்ற ஹோமியோபதி படித்த பெண் டாக்டர் அலோபதி சிகிச்சை அளிப்பது வந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார்.
திருச்சி
திருச்சியில் 5 பேரும், மன்னார்குடியில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் காளியம்மாள் (28) என்ற பெண் ஊசி போட்டு அலோபதி சிகிச்சை அளித்து வந்ததால் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி
பண்ருட்டியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனைகள் நடந்து வருவதையடு்தது பல மோசடி கிளீனிக்குகள் திறக்கப்படவே இல்லை. அவர்கள் எல்லாம் தலைமறைவாகியுள்ளனர்.
இது குறித்து தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி இராதாகிஷ்ணன்,
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 171 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 153 பேர் கிராமப்புறங்களில்தான் பிடிபட்டுள்ளனர். கைதானவர்களில் 101 பேரிடம் எந்தவித சான்றிதழ்களும் இல்லை. 70 பேர் டிப்ளமோ சான்றிதழ்கள் வைத்திருந்தனர். கிராமப்புற மக்களை ஏமாற்றி இவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். தொடர்ந்து சோதனை நடக்கும் என்றார்