அன்பு தோழமைகளுக்கு,
தமிழ் நண்பர்கள் வலைக்குழுவில் இணைவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.இங்குள்ள பெரும்பான்மையானோர் தமிழில் உரையாடுவதை பார்க்கையில் பெருமிதமாக இருக்கிறது..
தமிழின் சிறப்பை வேண்டியமட்டும் நாம் பார்த்தும், படித்தும் மகிழ்ந்து அமிழ்து போல் பருகியாயிற்று.. எனினும் இன்னும் சில நாட்களில் தமிழின் நிலை என்னவாக இருக்கும் என்பதை பற்றி ஒரு விவாத களம் அமைத்தால் என்னவென்று தோன்றிற்று..
அதற்கு சரியான தளமாய் இந்த தளம் இருக்கும் என்ற நம்பிக்கை நான் இங்கு வந்த நாளிலே அறிந்து கொண்டேன்..
நிறைய நண்பர்களையும், பல வலைத்தளங்களையும் பார்த்ததில் தமிழ் எவ்வாறெல்லாம் சிரம்தாழ்ந்து போயிருக்கிறது அவர்கள் முன் என நினைக்கையில் தோன்றிய எண்ணம்தான் இது.. எனக்கான எண்ணம் மெல்ல தமிழ் இனி தளர்ந்து விடுமோ என்று பல சம்யங்களிலும் இல்லை தாய் தமிழ் மெல்ல இனி வளரும் என்றும் நினைக்க தோன்றும்..
பார்வைகள் வித்தியாசப்படலாம்.. எனக்கு தோன்றிய கருத்துக்களை இங்கு முன் வைக்கிறேன்.. உங்கள் கருத்துக்களையும் தமிழ் தளராமல் இருக்க என்ன செய்ய போகிறோம் என்பதனையும் இங்கு தெரியப்படுத்துமாறு கோருகிறேன்..
ஆங்கில சொல் கலக்காமல் ஒற்றை வரி பேச ப்ரம்ம ப்ரயத்தனம் படும் தமிழர்களை பார்க்கும்போது எனக்கு தமிழ் மெல்ல மெல்ல தலை சாய்ந்து விடுமோ என்று தான் எண்ணத்தோன்றும்..
எத்தணை தான் பாரதியும் திருவள்ளுவரும் நம் வாழ்க்கையில் பிணைக்கப்பட்டு இருந்தாலும் போகிற போக்கில் மேலோட்டமாய் அவர்கள் படைப்பை மேற்கோள் காட்டுவோமே தவிர உள்ளார்ந்து சிந்தித்து என்றேனும உணர்ந்திருப்போமா என்றால் அது மிக குறைவாய் தான் இருக்கும்.
இந்திய திருநாட்டின் மொழிகளின் பாரம்பரியத்தை ஆராய்ந்தால் சமஸ்கிருததிற்கும் தமிழுக்கும் மட்டுமே மிக தொன்மையான வரலாறு உண்டு..
கோயில்களிலும் , திருமணம் போன்ற வைபவங்களிலும் அச்சர சுத்தமாய் இன்றும் சம்ஸ்கிருதம் உச்சரிக்கப்படுகிறது.. ஒரு சில பிரிவினர் சம்ஸ்கிருதம் முறைப்படி பயின்றால் தான் அவர்கள் முழு தகுதியை பெறுகின்றனர். ஆனால் இன்று நம் குழந்தைகளுக்கு நாம் மூன்றாம் மொழிபாடமாக கூட தமிழை பயிற்றுவிக்க முயல்வதில்லை.. ஒரு சில ஆண்டுகள் பாரம்பரியமிக்க மற்ற அயல் நாட்டு மொழிகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறோம்..
நம் நாட்டிலேயே இந்தி பேசும் மக்கள் தான் பரவலாக இருக்கின்றனர், ஆனால் அவர்கள் எவ்வித சங்கோஜமும் இன்றி மெத்த படித்திருந்தாலும் கூட இந்தியில் உரையாட தான் விரும்புகின்றனர்.. அதே போல் தான் மற்ற மாநில மக்களும்..
ஆனால் நம் தமிழ் இனத்தினர் மட்டும் தான் தமிழில் பேசினால் தரக்குறைவாய் எண்ணுகிறோம்.. நாம் படித்தவர்கள் என்று காட்ட ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பு என்று சொல்வது எங்கனம் நியாயம்..???
சில பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கபடுவது உச்சகட்டம்..
இன்றைய கால கட்டத்தில் தமிழ் வழி கல்வி மட்டும் போதாது, உலகின் பொது மொழிகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் .. ஆனால் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை ஒதுக்கி வைத்து பிறமொழிகளை மட்டுமே தெரிந்து கொள்வது நம் தாயை தள்ளிவைத்து பக்கத்து வீட்டில் போய் வாசம் செய்வது போலாகாதா?/
நமக்கு பின் வரும் தலைமுறையினர் எப்படி தமிழை நேசிப்பார்கள்.. அவர்களுக்கு தமிழின் பெருமை எவ்வாறு தெரிய வரும், வெறும் ஏட்டு மொழியாய் மட்டுமே நாம் வைத்திருக்க போகிறோமா இல்லை நம் சுவாசமாக வைத்திருக்க போகிறோமா ...
ஆனால் அதே சமயத்தில் இன்று இணைய வாயிலாக தமிழை பற்றி அறிந்து கொண்டு தங்கள் பிள்ளைகளை தமிழ் படிக்க வைக்கும் வெளி நாட்டு வாழ் தமிழர்களை பார்க்கையில் தமிழ் வளரும் என்றும் தோன்றுகிறது..
நம் கிராமங்களில் இன்னும் வட்டாரத்தமிழ் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.. ஓரளவு மத்திய வயதில் வாழ்பவர்கள் வேண்டுமென்றால் தங்கள் மூத்த தலைமுறையினருக்காக இன்னும் வீடுகளில் தங்கள் தாய்மொழியை பேசிக்கொண்டிருக்கின்றனர், ஆனால் இவையெல்லாவற்றையும் விட தமிழ் திசை மாறிப்போகும் சாத்தியக்கூறுகள் தான் தெரிகின்றன..
நண்பர்களின் கருத்துக்களுக்கு காத்திருக்கிறேன்.. மெல்ல தமிழ் இனி வளருமா இல்லை தளருமா என்று பதிலுரையுங்கள்..
கருத்துகள்
தமிழ் மீது அன்புள்ளம்
தமிழ் மீது அன்புள்ளம் கொண்டவர்களை காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
கவலை வேண்டாம், தமிழை யாராலும் அழித்துவிட முடியாது.
நாம் அந்நிய மொழி பேசி பெருமை பட்டுக்கொண்டாலும் அது நிரந்தரம் அல்ல. காலம் மாறும். நம்புவோம்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நல்ல
நல்ல பதிவு...........
--------------------------
நம் தமிழ் இனத்தினர் மட்டும் தான் தமிழில் பேசினால் தரக்குறைவாய் எண்ணுகிறோம்.. நாம் படித்தவர்கள் என்று காட்ட ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பு என்று சொல்வது எங்கனம் நியாயம்..???
சில பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கபடுவது உச்சகட்டம்.. கண்டிக்கப்பட வேண்டிய விசயம்.......
===============================================
தோழர் வினோத் சொன்னது போல் காலம் மாறும்!
நம்புவோம்!!
மெல்லத் தமிழ் இனிச் சாக
மெல்லத் தமிழ் இனிச் சாக இடமில்லை.
------------------------------------
2000 ஆண்டுகளுக்கு முன் உலகில் 7500 மொழிகள் இருந்தனவாம். 2000 ஆம் ஆண்டில் 3000 மொழிகள் ஆக குறைந்து காணப்பட்டது. இந்நிலைக்குக் காரணம் தாய் மொழிக்குள் பிறமொழிகள் நுழைந்தமையே. இதனால் தான், தமிழும் இனி மெல்லச் சாகுமெனப் பேசப்பட்டது. இதற்குச் சான்றாக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட கருத்துக் கணிப்புப்படி தமிழும் அழியவிருக்கின்ற மொழிகளில் ஒன்றென பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆயினும், மெல்லத் தமிழ் இனிச் சாக இடமில்லை. தமிழர் ஏதிலியாக உலகெங்கும் பரந்து வாழ்கையில் அவ்வவ் நாட்டு மொழிகளை பின்பற்ற இடமிருக்குமென அஞ்சி, ஆங்காங்கே தமிழைப் பேண முயற்சி செய்கிறார்கள். ஆங்காங்கே வாழும் தமிழறிஞர்கள் தமிழைப் பேணுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
மேலும், இணைய வழியில் தமிழ் அழியாது பேணும் நோக்கில் தமிழ் இணையப் பக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. Facebook, google, wikipedia போன்ற முக்கிய தளங்கள் மட்டுமல்லாது microsoft போன்ற மென்பொருள் உற்பத்தியாளர்கள் தமது தமிழ் பதிப்புகளை வெளியிட்டும் வருகிறார்கள். தமிழ் நண்பர்கள் தளம் போன்று பல தமிழைப் பேணும் கருத்துக்களம்(forum) இணைய வழியில் முளைக்கிறது. நம்மாளுகள் ஆங்கிலத்தில் Personal Home Page தயாரித்த காலம் போய்; தமிழில் வலைப்பூ(blog) நடாத்துவதில் அக்கறை காட்டுகின்றனர்.
மேலும், தமிழறிஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தமிழைப் பேணும் வழிகளை ஆய்வு செய்கின்றனர். மொழிப்பற்றுள்ள ஊடகங்கள் கூட தமிழைப் பேணும் வழிகளை வெளிப்படுத்தி வருகின்றன. இந்திய-தமிழக அரசின் தமிழைச் செம்மொழியென அறிவித்தமை இம்முயற்சிகளுக்கு உந்து சக்தியாக உள்ளது.
எனவே, தங்களது தமிழைப் பேணும் வழிகளை இப்பக்கத்தில் விவரித்தால் தமிழ் நண்பர்கள் எல்லோரும் ஒத்துழைப்போம். தமிழ் நண்பர்கள் தளம் 'தமிழால் தமிழுக்காக இணைவோம்' என்ற உயரிய கோட்பாட்டைக் கொண்ட தளம். தங்களைப் போன்றோர் தமிழ் நண்பர்கள் தளத்தில் இணைந்து தமிழைப் பேண முன் வந்தமைக்கு நண்பர்கள் எல்லோருடனும் இணைந்து பாராட்டுகிறேன்.

யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
மிக நீண்ட கருத்தை பதிவு
மிக நீண்ட கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
கருத்தை ஆணித்தரமாக விளக்கியமைக்கு மற்றொரு நன்றி
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
தோழர் யாழ்பாவணின்
தோழர் யாழ்பாவணின் கருத்துக்கு!!!









