Nallathambi's படம்

ஊழல் செய்பவர்க்கும்,ரவுடிகளுக்கும்,ஒட்டு போட லஞ்சம் கொடுபவர்களுக்கும்,அரசியல்வாதிகளின் தலைமுறைக்கும் தான் அரசியல் பண்ண தெரியும் என்ற?

அரசியல் ஒரு சாக்கடை நமக்கு ஏதற்க்கு என்று வெளியே என்று சொல்லி கொண்டா?


கருத்துகள்

kumaran's படம்

படித்த இளைஞர்கள் அதிக உடல்


படித்த இளைஞர்கள் அதிக உடல் உழைப்பில்லாத நாகரிகமான சூழ்நிலை இருக்க கூடிய,தன்னை பிறர் மதிக்க கூடிய இடத்தில்தான் பணிபுரிய விரும்புவார்கள்.அரசியலில் அப்படி ஒரு நிலையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், அரசியல் என்பது கடின உழைப்பைக்கொண்டது.அதில் நுழையும் வழி நேர்வழியாகவும் இருக்கலாம்.தவறான வழியாகவும் இருக்கலாம்.ஆனால் அதற்கும் பல சிரமங்களை கடந்தாக வேண்டும்.பல கீழ்த்தர விமர்சனங்களை கூட சகித்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். படித்தவர்களிடம் இந்த சகிப்புத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. எனவே,அதெற்கெல்லாம் துணிந்தவர்கள் மட்டும்தான் அரசியலில் தலைதூக்க முடியும். Smile ஒருவேளை அரசியல் என்பது பன்னாட்டு நிறுவன வேலை போலவோ ,அலுவலக உத்தியோகம் போலவோ ஆக்கப்பட்டால் படித்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடும். Smile (ஒரு சந்தேகம்; அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் படிக்காதவர்களா?)


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Nallathambi's படம்

சார் இன்னோரு விசியம் நம்மை


சார் இன்னோரு விசியம் நம்மை வளர்க்கு பொற்றொர் இஞ்சினியர்,டாக்டர் ஆக வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள் யாரும் அரசியல் வாதியாக வர வேண்டும் என்று விரும்புவதில்லை.இது அரசியல்வாதிகளின் குடும்பத்திற்க்கு விதிவிலக்கு.என் கட்டுரை பகுதியில் உள்ள இந்தியாவில் மறைக்கபட்ட உண்மை!! என்ற தலைப்பில் உள்ள ஒருவர் குடும்பம் 60 வருட அரசியியல் தொடர்கிறது.ப‌டித்தவர் அவர்களின் கைப்பாவையாக இருக்கிறார்.இதை எப்படி படித்த நம் மக்கள் விரும்புவார்கள்!!!!!

kumaran's படம்

படித்தவர் என்பதன் அளவுகோல்


படித்தவர் என்பதன் அளவுகோல் என்ன?10ம் வகுப்பு வரையாவது இப்போதுள்ள அரசியல்வாதிகள் படித்திருக்கமாட்டார்களா என்ன? Smile அரசியல்வாதி ஆவதற்கு எவ்வளவு படித்தால் நல்லது என நீங்கள் நினைக்கிறீர்கள்?


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Nallathambi's படம்

நான் எதிர் பார்ப்பது


நான் எதிர் பார்ப்பது குறைந்தது டிகிரியாவது படித்திருக்க வேண்டும். Smile

vinoth's படம்

கறுப்புக்காந்தி காமராஜர்


கறுப்புக்காந்தி காமராஜர் படிக்காத மேதை.. அவரிடம் இருந்தது நன்னடத்தை, நாணயம், ஊருக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணங்கள்

அரசியலில் படித்தவர்கள் வந்தால் சந்தோஷப்படலாம். ஆனால் படிக்காதவர்கள் ஊழல் செய்து மாட்டிக்கொண்டால்
படித்த அரசியல் வாதி மாட்டாமல் தப்பித்துக்கொள்வான் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
ஏனென்றால் அரசியல் எவரையும் மாற்றிவிடும் சக்தி வாய்ந்தது.

படிப்புடன் நன்னடத்தை, நாணயம், ஊருக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணங்கள், முக்கியமாக தீயவற்றை எதிர்கொள்ளும் தைரியம் உள்ளவர்கள் அரசியலில் வரவேண்டும் என்பது எனது கருத்து.

நல்ல விவாதத்தை ஆரம்பித்துள்ளீர்கள் நண்பரே


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Nallathambi's படம்

உங்கள் கருத்திற்கு நன்றி.நான்


உங்கள் கருத்திற்கு நன்றி.நான் உங்களிடம் மற்று ஒரு கருத்தையும் முன்வைக்கிறேன்.நம் அரசியல்வாதிகளில் 70 சதவிதம் பேர் மேல் குற்ற வழ‌க்குகள் உள்ளன. அதையும் பார்காமல் நாம் ஒட்டு போடுகிறோம் ஏன்?
காமராஜர் படிக்காத மேதை நான் எற்றுகொள்கிறேன்.அவரும் படிப்பையே ஊக்குவித்தார்.
heart bye

vinoth's படம்

நண்பரே நான் படிப்பு வேண்டாம்


நண்பரே நான் படிப்பு வேண்டாம் எனச்சொல்ல வில்லை. படிப்புடன் மேற்கூறியவைகளும் தேவை என சொல்கிறேன்.

அடுத்து. ஊழல், இதை தடுப்பது கடினம்.
அரசியல் அவ்வாறானது.

அரசு பதவியில் இருப்போர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கூட இருப்போர்கள் சும்மா இருக்கமாட்டார்கள்.

பெரிய நிறுவனங்கள் என் நிறுவனத்திற்கு வாய்ப்பு தந்தால் உங்களுக்கு இத்தனை கோடி என நாகரீகமாக பேரம் பேசும்.
கட்சியின் அல்லது குடும்பத்தின் பிற நபர்கள் பதவியை காரணம் காட்டி அவர்கள் வேலை நடக்க அல்லது லாபம் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்

எத்தனை காலம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது? Smile ஆசை யாரைதான் விட்டது. அவரும் ஆரம்பித்து விடுவார்

இதற்குத்தான் எதிரிகளை சமாளிக்கவும் தைரியமும் தேவை என்றேன்.. ஊழல் செய்யச்சொல்வோர்களும் எதிரிகளே..


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Nallathambi's படம்

ஆம் நண்பரே,எனக்கு சிறிய


ஆம் நண்பரே,எனக்கு சிறிய பழக்கம் சில சமயம் Yahoo,NDTV யில் NEWS Comments எழுதுவேன்.அதில் பலர் ஊழலை ஒழிக்க வேண்டும் எழுதுவார்கள்.நம்மால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.அதற்க்கு நாமும் ஒரு காரணம் நம்மக்கள் பாதி பேர் காசு வாங்கி கொண்டு ஒட்டு போடுவதையோ விரும்புகிறார்கள்.அதை எப்படி அவர்கள் திரும்ப எடுப்பார்கள்?இதுபோல் அரசு ஊழியர்களும் நான் கொடுத்த காசை எப்படி எடுப்பது என்று கூறுகிறார்கள். Smile