yarlpavanan's படம்

என் உயிரிலும் மேலான தமிழ் நண்பர்களே,
"தமிழைச் சாகவிடாது தமிழுக்கு உயிர் கொடுப்போம்" என்னும் கருத்தமையப் பல இணையப் பக்கங்களில் கட்டுரை எழுதுகிறார்கள். அப்படியொரு பக்கத்தைப் பார்த்தபின், இதற்கெல்லாம் "தூய தமிழ் பேணும் சங்கம்" அமைத்தால் நல்லதென அப்பக்கத்துக்குக் கருத்துரையும் கொடுத்தேன்.
பின்னர் நீண்ட நேரம் சிந்தித்த போது " தூய தமிழ் பேணும் சங்கம் அமைக்க எனக்கு விருப்பம். விரும்புவோர் எல்லோரும் வாங்க தூய தமிழ் பேணும் சங்கம் அமைப்போம். அல்லது உங்களில் யாரும் தொடங்கினால் நானே வந்து இணைகிறேன். " என்ற எண்ணம் தோன்றியது. அதனை அப்படியே எனது FaceBook பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். தமிழ்நண்பர்கள் தளத்துடன் எனது FaceBook பக்கத்தை இணைக்க முயற்சி செய்து தோற்றுப் போனதால் இப்பகுதியில் இதனை வெளிப்படுத்துகிறேன்.
எனது FaceBook பக்கத்தை அடைய yarlpavanan@gmail.com ஐ வைத்துத் தேடலாம்.
இவ்வண்ணம்
"தூய தமிழ் பேணும் சங்கம்" பற்றிய தங்களது கருத்துரைகளையும் மதியுரைகளையும் நாடி நிற்கும்
உங்கள் யாழ்பாவணன்