chandru2110's படம்

தமிழ் நாட்டு பாட திட்ட்டத்தில் மற்ற மாநிலங்களை போல் தேசிய மொழி ஹிந்தி இல்லை என்பது நல்லதா இல்லை கெட்டதா?


கருத்துகள்

vinoth's படம்

நல்லது ஒருபாடம் குறைந்தது :


நல்லது
ஒருபாடம் குறைந்தது : )
--
வினோத் - LKG


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


chandru2110's படம்

தமிழ் நாட்டுலேயே


தமிழ் நாட்டுலேயே இருக்குறவங்களுக்கு ஹிந்தி அவசியமில்லைன்னு புரியுது. கர்நாடகா,ஆந்திராவில் வேலை பார்த்துவிட்டு இப்பொழுது மகாராஷ்ட்ராவில் இருக்கும் என் அனுபவத்தில் கூறுகிறேன். ஹிந்தி தேவையில்லை. அதை பின்பு விளக்குகிறேன்.


சந்துரு


vinoth's படம்

கண்டிப்பாக விளக்கவும்


கண்டிப்பாக விளக்கவும்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


chandru2110's படம்

நான் பார்த்த எல்லாம்


நான் பார்த்த எல்லாம் இடத்துலேயும் அவங்களோட பிராந்திய மொழி. புரக்கனிக்க படுகிறது. வேறு மொழி தினிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் வேறுபட்ட திராவிடர்களுக்கு ரொம்ப கஷ்டம். என்னை மாதிரி மாநிலத்தை கடக்குற சிலர் கஷ்ட்டப்படாலும் பராவாயில்லை. நம் நாட்டுக்குள் தமிழ் புற‌க்கணிக்க படுவதை நான் விரும்பவில்லை. இங்கு நான் "தமிழ் நாட்டில் ஹிந்தி இல்லை"ன்னு சொல்ல ரொம்ப பெருமையா இருக்கு. ஏன்னா இங்க ஒரு மராத்தியனை , மராத்தியில் சொல்லாதே! ஹிந்தியில் சொல்லுன்னு ஒருவன் திட்டியதை நான் கண்கூட பார்த்துள்ளேன்.


சந்துரு


பிரபாகரன்'s படம்

நாம் வெளிமாநிலங்களில் வேலை


நாம் வெளிமாநிலங்களில் வேலை பார்க்கும் சூழ்நிலையில் ஹிந்தி அவசியம் தெரியவேண்டியுள்ளது. வளைக்குடா நாடுகளிலும் ஹிந்தி நமக்கு உதவும். ஆகவே ஹிந்தி கட்டாய பாடமாக இல்லாமல் விருப்பப்பாடமாக இருப்பது நல்லது. அதே நேரம் நம் தாய் மொழியை பேச வேண்டிய இடத்தில் கூட பேசாமல் ஆங்கிலம் பேசுவது வேதனை அளிக்கிறது.

அன்புடன்
பிரபாகரன் கே.

chandru2110's படம்

ஆம் , நீங்கள் சொல்வது போல்


ஆம் , நீங்கள் சொல்வது போல் வளைகூடா நாடுகளில் இந்தி அவசியம் தான். இந்தி விருப்பபாடமாக இருக்கலாம்.


சந்துரு


prabhuchandran's படம்

who tell hindi no need he is


who tell hindi no need he is realy fool & no.1 fool.
should be need all language.abdul kalam know.12 language. by prabhuchandran2@gmail.com

samrudran's படம்

இந்த காலத்துல ஹிந்தி


இந்த காலத்துல ஹிந்தி வேண்டாம்-னு சொல்றது தப்புதான், அதுக்காக நண்பர் பிரபு சொல்றது கொஞ்சம் ஓவர்தான்... என்னதான் ஹிந்தி வேண்டாம்-னு சொல்லி நெறைய பேரு இருந்தாலும், தமிழ்நாட்டுல ஹிந்தி பிரசார் சபா இல்லாமையா இருக்கு? எத்தனையோ மாணவர்கள் ஹிந்தி-ல மேல மேல எக்ஸாம் எழுதி பாஸ் ஆகாமயா இருக்காங்க? அவசியம் இருந்தா அவங்கவங்க வேண்டியதை கத்துக்குவாங்க... கட்டாயப்பாடமா இல்லாதப்பவே தமிழ்நாட்டுல தமிழை முதல் மொழியா எடுத்துருக்குரவங்கள ரொம்ப குறைச்சலா தான் பார்க்க முடியுது (அரசுப்பள்ளிகள் இதுல உட்படுத்தப்படவில்லை)...

தமிழ்நாட்டை விட்டு வெளியில் போய் பார்த்தாக் கூட, அந்தந்த பிராந்திய மொழிக்குதான் முதலிடம்.எல்லா மொழிகளும் கலந்து உறவாடுற இடமா கருதப்படுற பெங்களூருல கூட (நான் தற்போது வசிப்பது அங்கதான்) தமிழ், கன்னடம் இரண்டுக்கும் அப்புறமா மூணாவது இடத்துலதான் ஹிந்தி இருக்கு. அநேகமா எல்லா மாநிலங்களிலும் இதே நிலைமைதான். அதுக்காக எல்லா மாநில மொழிகளையும் படிச்சு வச்சுக்க முடியுமா?

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமால் பன்னிரண்டு மொழிகள்ல பேச முடியுறதுக்கு இரண்டு முக்கிய காரன்கங்கள் இருக்க முடியும். ஒண்ணு: பல மொழிகளைக் கத்துக்க ஆர்வம், ரெண்டு: பல இடங்கள்ல பணி செய்த அனுபவம். இதுக்கும் சாதாரண மனிதனுடைய மொழி அறிவுக்கும் தொடர்பு படுத்துவது அபத்தம்.

"நீ எத்தனை மொழிகளைப் பேசுகிறாயோ, அத்தனை மனிதர்களாக மாறுகிறாய்" என்பது ஒரு பொன்மொழி. அப்படி ஆவதற்கும் ஒவ்வொருவரது சுற்றுச்சூழலும் வாய்ப்புகளும் முயற்சியும் உழைப்பும் கண்டிப்பாகத் தேவை. பெங்களூருலையே ஆறு வருஷத்துக்கு மேல இருந்தும், "வா, போ, தா, செய், சாப்பிடு" ங்குற ஐந்து வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் கன்னடத்துல தெரியாத் மூணு பேரு (பெரிய பெரிய படிப்பு படிச்சவங்க; நம்ம ஊருகாரவங்க) என் கூட வேலை பாக்குறாங்க. இதுக்கு என்ன சொல்றீங்க?


சாம்ருத்திரன்.
"Dubito, Ergo Cogito, Ergo Sum." - Rene Descartes. " எதையும் சந்தேகிக்கிறேன், அதனால் யோசிக்கிறேன், அதனால் உயிருடன் இருக்கிறேன்." ரெனே தேஸ்கார்த்.


vinoth's படம்

ஹிந்தியை படிப்பது தப்பில்லை.


ஹிந்தியை படிப்பது தப்பில்லை. ஆனால் கட்டாயப்பாடமாக கொண்டுவருவது நியாயமல்ல

வேலைவாய்ப்பு ஹிந்தியை ந்ம்பி இல்லை. ஆங்கிலத்தை நம்பியே உள்ளது. ஆனால் வளைகுடா நாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் ஹிந்கி அறிந்திருக்கல் அவசியம். அவ்வாறு செல்பவர்கள் மட்டும் விரும்பி படிக்கலாம்.

தமிழ் நாட்டில் வேலைக்கு வரும் வேறு மாநில ஆட்கள் தமிழ் படித்துவிட்டு வருவதாக தெரியவில்லை.

தமிழ் படித்தவர்களே நாம் தமிழை பயன்படுத்த தயங்குகிறோம். இந்த நிலையில் இன்னொரு மொழியும் என்றால கஷ்டம்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's படம்

(No subject)


Big smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.