vinoth's படம்

தமிழீழ தேசத்தின் மகா அன்னை, பிரபாகரன் என்ற தவப்புதல்வனை தரணிக்குத்தந்த பார்வதி அம்மாள் இன்று அதிகாலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இறைவனயடி எய்தினார்.

செய்தி -
எமது தேசியத் தலைவர் மேதகு திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மா இன்று காலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் உங்களுக்கு அறியத் தருகின்றோம். வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.

தமிழின விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அத் தேசத்தின் மகா அன்னையை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நினைவு கூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

ஈழத்தாயின் பூவுடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அளவில் ஈழமக்களின் அஞ்சலிக்குப்பின்னர் விதைக்கப்படலாம் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழினத்தை அடிமைத் தளையிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அத்தாயை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்

தமிழீழ தேசத்தின் பிரபாகரன் என்ற தவப்புதல்வனை தரணிக்குத்தந்த பார்வதி அம்மாள் இறைவனயடி எய்தினார்.

கருத்துகள்

nandhini's படம்

(No subject)

Crying

Nandhu

Balamurugan78's படம்

intha thamiz mann engal

intha thamiz mann engal thaiyai izanthu vittathu.

arun_v76's படம்

வருத்தம்

வருத்தம் தெரிவித்துக்கோள்கிறேன்.
வருந்துகிறேன்
பிள்ளை எப்படி பட்ட கொடுமைக்கரனாக இருந்தாலும் ஒரு தமிழ் தாய் தன் மகன் துன்பத்தில் இருக்கும் பொழுது பதறுவாள்.அப்படிபட்ட தமிழகத்தில்,தமிழுக்காக போராடி,தமிழனுக்காக உயிர் தியாகம் செய்த ஒரு மாபெரும் தமிழீழ தலைவனுடைய, தாயார் பார்வதி அம்மாள் உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சைக்கு தமிழகத்திற்கு வந்த பொழுது அவருக்கு அனுமதி மறுத்து,திருப்பி அனுப்பிய அவல நிலைக்காக ஒரு தமிழனாக இந்திய நாட்டில் பிறந்ததற்காக‌ தலைகவிழ்ந்து
அந்த தாயின் ஆத்மாவிடம் கண்ணீருடன் மன்னிப்பு கேட்கிறேன்.