பார்,
தெரிந்துகொள்,
பின்னர் பிரிந்து விடு,
நான் அறிந்த பெருவாரியான மனிதர்களின்,
சோக காதல் கதை இது.
இந்த கவிதையை, எங்கேயோ நான் படித்த பொழுது, காதல் தோல்வியை பற்றி அதிகமா,யோசிக்க சொல்லியது.
பெருவாரியான நண்பர்கள்,மறக்க முடியாத தன் நினைவுகளாய் காதல் தோல்வியை சுமந்து கொண்டுள்ளனர்.
சிலர் ஜாதி,மதம்,மொழி,எனும் பிரிவினைகளால் வலுக்கட்டயமா பிரிக்க படுகிறார்கள்.
சிலர் தங்கள் குடும்பத்திற்காக தாங்களாகவே,
பிரிவது உண்டு.
இன்னும் சிலர் தங்களோட கல்யாணம் முடிந்த பிறகு தான் ஒருத்தரை ஒருத்தர்,
பிடிக்கலன்னு சொல்லி பிரியறாங்க.
ஏன்?காதலிக்கும் பொழுதே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க வேண்டியது அவசியம்.
எல்லா பசங்களும், பொண்ணுங்க கிட்டும்,
எல்லா பொண்ணுங்களும், பசங்க கிட்டும்
நெறைய நடிக்கிறாங்க,
தங்களோட காதல்ல உண்மைய இருப்பது
இல்ல.
காதலிக்கும் பொழுது இது யாருக்கும் புரியாது,
காதல தன்னோட வாழ்க்கையோட சேர்த்து யாரும் பார்க்கிறது இல்ல.
ஏதோ அழகு பொருள் மாதிரி பிரிச்சு வைக்கிறாங்க.
பசங்களும் பொண்ணுங்களும் எந்த மாதிரியான,விசயங்கள தங்களுக்குள்ள மறைகிறாங்க.
எந்த மாதிரியான காரணங்கள் புரிதல,
தடுக்குதுன்னு பேசுறது மூலமா,
காதல ஆரோக்யமா வளர்க்கலாம்.
நிறைய காதலர்கள வாழவைக்கலாம்.
தயவு செய்து தொடருங்கள் நண்பர்களே...........
-மீனா விக்னேஷ்
கருத்துகள்
நீங்கள் தொடக்கியது நல்ல
நீங்கள் தொடக்கியது
நல்ல கருத்து - அது
காதலிக்க முயல்வோரின் கதையே!
முயலாமலிருக்க
காதல் இயல்பாய் அமையின்
இப்படி இருக்காது!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
வாழ்க்கையில் ஒரு பகுதி தான்
வாழ்க்கையில் ஒரு பகுதி தான் காதல் என்பதனை உணரவேண்டும்.
”காதலிக்கும் பொழுது இது யாருக்கும் புரியாது,
காதல தன்னோட வாழ்க்கையோட சேர்த்து யாரும் பார்க்கிறது இல்ல”
----------- அருமையான கருத்து.







