yarlpavanan's படம்

என் வாழ்வில் இயற்கையில் காதல் அமையவில்லை. என் நண்பர்கள் ஒவ்வொரு வடிவுக்கு அரசியையும் காட்டிக் காதலிக்கச் சொல்வாங்கள். திரைப்படக் கதை கூறிக் காதலிக்கப் படிப்பித்துப் பார்த்தும் சரிவரேல்லை. காதல் இயற்கையாக வரவேணும் என்று சொல்லிப்போட்டு நானும் பேச்சுத் திருமணம் தான் செய்தேன். நீங்களும் என்னைப் போல பேச்சுத் திருமணம் செய்ய இருந்தால் காதலிக்காமல் இருக்கலாம்.
நான் திருமணமாகிய பின், தோழி ஒருத்தி விபத்துக்குள்ளானாள். அவ்விடத்தில் அவளுக்கு உறவென்று சொல்ல எவருமில்லை. நானே அவளுக்குரிய எல்லாப் பணிகளையும் செய்தேன். மூன்றாள் சுகமாகியதும் மருத்துவ மனையால வெளியேற்றியதும் வீட்டிலும் சேர்ப்பித்தேன்.
பின், நடைபேசியில் இடை இடையே கதைத்து வந்தாள். ஒருநாள் நேரிலே சந்தித்து "உங்களைப் போல நல்ல ஆளைத் தேடியும் பிடிக்கேலாது. நான் உங்களைக் காதலிக்கிறேன். நீங்கள் என்னைக் காதலிக்காமல் இருக்கலாமோ?" என்று கேட்டாள். திருமணம் செய்தவரைக் காதலிக்கக் கூடாதென ஆற்றுப்படுத்தினேன்.
ஆனால், திருமணம் செய்யாத நீங்கள் இப்படியான சூழலில் காதலிக்காமல் இருக்கலாமோ?
Love


கருத்துகள்

vinoth's படம்

காதலிக்க வேண்டும் என்பதற்காக


காதலிக்க வேண்டும் என்பதற்காக உதவி செய்து நட்ககும் பலர் இப்பூமியில் உண்டு. Smile

உங்கள் மனைவிக்கு துரோகம் செய்யாத உங்களுக்கு வாழ்த்துகள். உங்கள் குடும்ப வாழ்வை குலைக்க நினைத்த அப்பெண்ணை ஒதுக்கியது மிக நல்லது .

காதலிக்காமல் இருக்கலாம்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


saravanamuthu's படம்

கண்டிப்பாக காதலிக்காமல்


கண்டிப்பாக காதலிக்காமல் இருக்கலாம்!

இருந்தாலும் அவரவர்க்கு அமையும் காதலியைப் பொருத்தது. Dingue

yarlpavanan's படம்

உங்கள் கருத்தை முதலில்


உங்கள் கருத்தை முதலில் ஏற்றுக்கொள்கின்றேன்.
இரண்டாவதாகக் குறித்த பெண்ணின் நிலையைப் பார்ப்போம். அவள் இளகிய உள்ளம் கொண்டிருந்தால், நோயாளி என்று அன்பு காட்டும் எவரையும் தன்னை விரும்புவார் என நம்பியிருக்கலாம். நோயுற்ற வேளையாயினும் பிற செயலின் போதும் குறித்த ஒருவரின் உதவி முக்கிய பங்காற்றி இருப்பின் அந்தாளை விரும்பலாம். ஆனால், மணமுடித்த ஒருவர் மீது விருப்பங்கொள்வதை ஏற்கமுடியாது. நாம் தமிழர். தமிழர் பண்பாட்டில் இதற்கு இடமில்லை.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


yarlpavanan's படம்

இயற்கையாக அமையாத போது


இயற்கையாக அமையாத போது கண்டிப்பாகக் காதலிக்காமல் இருக்கலாம்! ஆனால், இயற்கையாக அமையின் காதலிக்காமல் இருக்கலாமோ! அதாவது நீண்ட நாள் பழகி இருந்தும் I Love You சொல்லாமல் இருந்தும் ஒருவர் உதவியில் இன்னொருவர் நன்மை அடைந்திருந்தால் அதனை அவர் அடிக்கடி நினைவூட்டுகையில் குறித்த ஆளின் மீது இருந்த விருப்புக் காதலாக மாறலாம். ஒரு தலைக் காதல் ஒரு போதும் நன்மை தராது.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil