yarlpavanan's படம்

என் உயிரிலும் மேலான தமிழ் நண்பர்களே,
நண்பர்களுக்கு நண்பர்கள்; படைப்பைப் பார்த்த பின் படைப்பின் தரத்தை வெளி்ப்படுத்தலாம், படைப்பாளியை ஊக்கப்படுத்தலாம். தங்கள் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை வெளி்ப்படுத்தலாம். நண்பர்களுக்கு இடையே நகைச்சுவையாகவேனும் மிகச் சிறிய ஊடலும் வேண்டாம்.
உறுப்பினராகாத வாசகர்களும் தமிழ்நண்பர்கள் தளத்தைப் பார்வையிடுகிறார்கள். எங்களது படைப்புகளையும் எண்ணங்களையும் பார்வையிட்ட பின்னர் தான் புதிய உறுப்பினர்கள் தமிழ்நண்பர்கள் தளத்தில் இணைகிறார்கள். இதே போலத் தான் நானும் இத்தளத்தில் இணைந்ததேன்.
நாங்கள் அனைவரும் வாசகர்களை மகிழ்வூட்டச் சிறந்த படைப்புகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்த ஒன்றுபடுவோம்.
நண்பர்களுக்கு நண்பர்கள்; நன்றாகத் தாக்குரை செய்யலாம், நண்பர்களது படைப்புகளைத் திறனாய்வு செய்யலாம் எல்லாம் வாசகர்கள் மகிழ்வடையக் கூடியதாக அமைய வேண்டும்.
அப்போது தான் உலகத் தமிழர் எல்லோரையும் தமிழ்நண்பர்கள் தளத்திற்குள் உள்வாங்கலாம். இவை தான் என் விருப்பம்! ஏதும் தங்களுக்குத் தவறாகத் தென்படின், என்னைத் தண்டிக்கலாம் வாருங்கள்.
நன்றி.