
பாரதரத்னா விருது பெற்ற இந்துஸ்தானி இசை மேதை பண்டிட் பீம்சென் ஜோஷி புனே மருத்துவமனையில் இன்று காலை மரணமடைந்தார்.
இவருக்கு 88 வயதாகிறது. கடந்த டிசம்பர் 31ம் தேதி வயோதிகம் காரணமாக அவர் புனேயில் உள்ள சஹாயத்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
கடந்த 2008ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினைப் பெற்றார் ஜோஷி.
"மிலே சுர் மேரா துமாரா" என்ற பாடல் இவருடன் பலரும் பாடி அதில் பல திரைப்பட நடிகர்களும் நடித்திருந்து இந்தியா முழுவதும் மிகப் புகழ் பெற்றது குறிப்பிட தக்கதாகும்.
கர்நாடக மாநிலம் காடக் நகரில் 1922ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி பிறந்தவர் ஜோஷி. அவரது குடும்பத்தில் சகோதர, சகோதரிகள் 16 பேர். அதில் மூத்தவர் ஜோஷி. காயல் என்ற பாடல் வகையில் நிபுணத்துவும் பெற்றவர். இந்துஸ்தானி இசைப் பரம்பரையில் வந்தவர். பஜன் மற்றும் அபங் பாடல்களிலும் இவர் தலை சிறந்தவர்.
குரு -சிஷ்யப் பரம்பரையுடன் நின்று கொண்டிருந்த காயல் பாடல்களை பிரபலப்படுத்தி வெளியுலகுக்குக் கொண்டு வந்தவர் பீம்சென் ஜோஷி.
இவர் 1985ம் ஆண்டு பாடிய தேச பக்திப் பாடலான இதில் ஜோஷி உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு பாடி நடித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
வருந்துகிறோம்
--
செய்தி




