chandru2110's படம்

இந்திய அரசின் பரிசீலனையில் உள்ள இந்த சர்ச்சையை , நாம் ஆக்கபூர்வமாக விவாதிப்போம்.


கருத்துகள்

chandru2110's படம்

முதல்ல பாலியியல் கல்வி என்பது


முதல்ல பாலியியல் கல்வி என்பது உடலுறவை மட்டும் பற்றியதில்லைன்னு சொல்லிக்குறேன். வளரும் நாடான இந்தியாவில் சிறுவர்களுக்கு பால் உறுப்புக்களை பற்றி விழிப்புணர்வு மிகவும் குறைவாக‌ இருக்கு. பால் உறுப்புகளை எப்படி பராமரிப்பது , பாலியியல் நோய்கள் , பாலியியல் பற்றிய மக்களின் வீண் ஐயப்பாடுகள் ,பெண்களின் பிரச்சனைகள் போன்றவைகளுக்கு நல்ல முடிவும் அறிவும் கிடைக்கும். மேற்கு நாடுகளை போல் அல்லாமல் இங்கு குடும்பத்துக்குள் விவாதிக்க முடியாத பண்பாடு நிலவுவதால் பள்ளியில் அவசியம் தேவை.


சந்துரு


vinoth's படம்

இப்ப கூட பாலியல் கல்வி


இப்ப கூட பாலியல் கல்வி இருக்கே, தனிப்பாடமா இல்ல அவ்ளோ தான்

ஆனா அதை அறிமுகப்படுத்தும் முன்
மாணவர்கள் வயது
இருபாலர் படிக்கும் வகுப்பு

அதற்குமுன் ஆசியருக்கு பயிற்சி என எல்லாம் பார்க்கவேண்டியுள்ளது

இப்பவே சில ஆசிரியர்களின் சில்மிஷங்கள் அதிகமாக இருக்கு
பாலியல் கல்வி என்ற பெயரில் வந்தா அது இன்னும் அதிகமாக வாய்ப்பிருக்கு

அதே போல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பாலியல் கற்க பள்ளிக்கூடம் செல்கிறார்கள் என ஏற்கும் நிலை இன்னும் வரவில்லை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


chandru2110's படம்

உங்க கருத்து ஏற்றுக்


உங்க கருத்து ஏற்றுக் கொள்ளகூடியது.


சந்துரு


kumaran's படம்

நடைமுறைப்படுத்த சிக்கல் நிறைய


நடைமுறைப்படுத்த சிக்கல் நிறைய இருக்கு சந்துரு...நம் நாட்டில் பத்தாம் பசலிகள்,பிற்போக்குவாதிகள்,மூடநம்பிக்கை மிக்கவர்கள்,எதையும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற பக்குவமில்லாதவர்கள் அதிகம். அதனால் மிகவும் சிரமம். நாம்தான் நமக்கு எதை தெரிந்துகொள்ள விரும்புகிறோமோ அதை தேடிப்பிடித்து தெரிந்துகொள்ளவேண்டும் ...(உதாரணமாக சொல்லப்போனால்...நம் தளத்தில் கூட பாலியல் சம்பந்தப்பட்ட விளக்க பதிவுகள் போட்டால் அழித்துவிடுகிறார்கள்....அந்தளவுக்கு அறியாமை நிலவுகிறது....பிறகெப்படி.....?)


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


chandru2110's படம்

உங்கள் கருத்து


உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியது.


சந்துரு