இதயம் கனிந்த நல்லோரே—என்
இதயத்தில் வாழும் பல்லோரே!
உதயம் ஆங்கிலப் புத்தாண்டே!-இன்று
உளங்கனி வாழ்த்துகள் உங்களுக்கே!
இன்பம் எங்கும் பொங்கட்டும்!-உங்கள்
இல்லம் செழுமையில் ஓங்கட்டும்!
துன்பம் முழுமையும் போகட்டும்!-நல்
தூயவர் ஆட்சியே நிலைக்கட்டும்!
சாதி பேதம் நீங்கட்டும்!-எங்கும்
சமத்துவம் எதிலும் நிலவட்டும்!
நீதி நேர்மை தவழட்டும்!-மக்கள்
நிம்மதி யாக வாழட்டும்!
பாடே படுபவன் ஆளட்டும்!-இந்த
பரம்பரை ஆட்சி மாளட்டும்
கேடே பெற்றோம் எதனாலே-மிக
கேவல மான இதனாலே!
உழைப்பவன் வாழ வழியில்லை!-நன்கு
ஊரை ஏய்ப்பவன் தரும்தொல்லை
பிழைப்பைத் தேடும் ஏழைகளே-பாபம்
ஏதும் அறியாக் கோழைகளே!
ஊரில் இல்லை ஒருவாரம்-எனவே
உம்வலை காண யிலைநேரம்!
வேரில் பழுத்த பழம்நீரே-உமை
வேண்டினேன் மன்னிக்க எனைநீரே!
புலவர் சா இராமாநுசம்
Comments
தமிழ் அழகு நடை பயிலும்
தமிழ் அழகு நடை பயிலும் கவிதை. நளினம் மென்மை செறிவு கொண்ட மனம் கவரும் புத்தாண்டுக் கவிதை. உண்மையை விளக்கமாகவும் இனிமையாகவும் அளிக்க வல்ல உங்களுக்கு என் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துகளும் உரித்தாகுக.
வழிகாட்டலுடன்
வழிகாட்டலுடன் வாழ்த்துகள்
வாழ்த்துகளுடன் வரலாறுகள்
புலவர் பாவினிலே 2012 இனை
நன்றே அறிய முடிந்ததே!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
இனிய புத்தாண்டு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
நானோ வசதி இல்லாமல் வறுமையில் வாழ்கிறேன்
ஆனால் வறுமையோ என்னிடம் வசதியாய் வாழ்கிறது...
www.PakeeCreation.Blogspot.Com








