சொகுசா இருக்க தான்...சிரிக்க மட்டும்,
தலைவர் ஏன் கோபமா இருக்கார் ?
ரீமேக் திருக்குறள்(அதிகாரம்/குறட்டை )
உறங்கின் குறட்டையின்றி உறங்குக அஃதில்லார்
உறங்கலின் உறங்காமை நன்று.
- Srinivasan.K
நோ டென்ஷன்! ஒன்லி ரிலாக்ஸ்!
முடியில இளநரை என்று வந்த நோயாளியை ஏன் விரட்டி அனுப்பிவிட்டீர்கள்...?
விளையாடாதீங்க....வந்தவருக்கு 65 வயசு ஆகுது.....!
இதைத்தான் முடியல என்பதா....
வெள்ளை அடிக்க வந்த இடத்தில ஏன் திருடினாய்...?
அவங்கதான் சார் சொன்னாங்க சுத்தமா அடிச்சிட்டு போக சொல்லி...!!
ஏன் ஒயின்ஷாப்ல போய் குடிச்சிட்டு ஆபீஸ் வருகிறாய்...?
நீங்க கொடுக்கிற சம்பளத்திற்கு பார்ல போயா குடிச்சிட்டு வரமுடியும்....?
நீங்கள் எடுத்த "ஆறடி நிலம்" என்கிற
திரைப்படத்தை ஏன் பாதியிலேயே நிறுத்திவிட்டீர்கள்...?
இனி என்னிடம் விற்க ஒரு அடி நிலமும் இல்லை.
அதனால்...நிறுத்திவிட்டேன்....!
கணவன் :உன்னை பார்த்த நேரத்துல...
மனைவி : உலகத்த மறந்துடீங்களா?
கணவன் : வேற ஒரு நல்ல பொண்ணா
பார்த்திருக்கலாமோ னு நினைச்சேன்
கிராமத்து அப்பா: எப்புடியோ ஒருவழியா
BSC படிப்ப முடிச்சுட்ட. அடுத்து என்ன செய்ய போற.
மகன்: அடுத்து அரியர்னு ஒரு மேல் படிப்பு
இருக்குப்பா . அதை படிக்கணும்.
அப்பா: அதையும் பெயில் ஆகாமல் படி கண்ணா...
கட்டின புடவையோடு வரச்சொன்னேன்..
நீ ஏன் இவ்வளவு புடவைகளை கொண்டுவந்தாய்...?
அத்தனையும் நான் கட்டினதுங்க அத்தான்...!
போலீஸ்: ஏன்பா அந்த அம்மா வீட்டுல டிவிய மட்டும் திருடினே...
திருடன்: அந்த அம்மா வீட்டுக்காரர் தாங்க திருட சொன்னார்
சீரியல் பாத்துகிட்டு சோறே போட்றதில்லையாம் ...
நோயாளி :அய்யா எனக்கு கையை பார்த்து
எப்ப கல்யாணம் ஆகும்னு சொல்லுங்க ?
டாக்டர் : இது ஹாஸ்பிடல் ...
ஜோசியம் பார்க்கிற இடம் இல்ல ..
நோயாளி : டிவில நாங்க இருக்கோம்
வாங்கனு சொன்னிங்களே ...சரி நான் வறேன்...
டாக்டர் : கன்சல்டன்சி பீஸ் 700 .
நோயாளி : எதுக்கு ..
டாக்டர் : சந்தேகத்தை
கிளியர் பண்ணிக்கிட்டியே...அதுக்குத்தா
நோயாளி : இப்ப எனக்கு நெஞ்சு வலிக்குது டாக்டர் ....
மனைவி: இப்படி குடிச்சிட்டு வர்றீங்களே...
பொண்டாட்டி ஒருத்தி இருக்கேன்னு மறந்துட்டீங்களா?
கணவன்: அதை மறக்கிறதுக்கு தானே குடிக்கிறேன்..
கணவன்: என் கண்ணுக்குள்ள நல்லா பாரு என்ன தெரியுது?
மனைவி: ஐயோ உண்மையான லவ் தெரியுதுங்க...
கணவன்: நாசமாப் போச்சு...கண்ணுல என்னவோ விழுந்து உறுத்துது...
சீக்கிரமா ஊதுடி..ரொம்ப வலிக்குது...
ஹெட்மாஸ்டர்: டேய் எவன்டா, தமிழாசிரியரோட
காலை பிடிச்சு இழுத்தவன்...
மாணவன்: அவர் தான் ஸார் சொன்னார்,
நாளை காலை வாருங்கள் என்று...தப்பா ஸார்...
ஹெட்மாஸ்டர்: தப்பே இல்லடா...உன்னை
எல்லாம் ஸ்கூல்ல சேர்த்தேன் பாரு
அது தான் நான் பண்ணின பெரிய தப்பு...
வடை போச்சே...
ஜோக்ஸ்
டாக்டர் ஜோக் –
“டாக்டர் இந்தப் பல் நேத்து ஒரு நாள் மட்டும் ஆடினது”
“அப்ப அது ஒன்டே மேட்சுன்னு சொல்லுங்க”
திருடன் ஜோக் –
“ஏட்டையா வீட்டு ரேசன் கார்டைப் பார்த்து, கபாலி ஏன் கண் கலங்கிறான்..”
“அதுல அவன் பேரும் இருந்துச்சாம்”
மன்னர் ஜோக் –
“மன்னா இளவரசர் தங்களை அப்படியே உரித்து வைத்திருக்கிறார்”
“எதில் அமைச்சரே?”
“புறாவை உரிப்பதில் தான்!”
குடிமகன் ஜோக் –
“ஏர்ப்போட்ல அந்த குடிகாரப் பயணி என்ன கலாட்டாப் பண்றாரு?”
“சரக்கு விமானத்துலதான் போவேன் அடம்பிடிக்காரு”
நடிகை ஜோக் –
“அந்த ஆள் பயங்கர சோம்பேறின்னு எதை வைச்சு சொல்றே…”
“புடவை துவைக்க பயந்துக் கிட்டு கவர்ச்சி நடிகையை கட்டிக்கிட்டார்னா பாரேன்”
பாகவதர் ஜோக் –
“அந்த பாகவதரோட கச்சேரிக்கு போனா நூறு ரூபாய் செலவாகும்”
“உள்ளே போக பணம் கொடுக்கணுமா”
“இல்ல… பாதியில வெளியே வர பணம் கொடுக்கனும்”
கடவுள் ஜோக் –
“கடவுளே நான் ஜனாதிபதியாக ஆகும் வரம் வேண்டும்”
“பல மக்களை காக்கும் பணி அது. வேறு வரம் கேள்”
“தளபதி படம் 100 நாள் ஓட வேண்டும்”
“நீ அமெரிக்க ஜனாதிபதியாக ஆக வேண்டுமா, இல்லை இந்திய ஜனாதிபதியாகவா”
சிரி சிரி சிரிப்பு!!!!!!!!!!!!!!!!!!!
வயிறு எரியுது டாக்டர்
எப்போதிலிருந்து?
உங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்.
-------------------------------------------------------------------------------
என்ன டாக்டர் ஆப்ரேஷனுக்கு முன்னாடி பேஷண்ட் நெத்தியில கத்தியால ஒரு கோடு போடுறாரு…?
அது பிள்ளையார் சுழியாம்….
-------------------------------------------------------------------------------
டாக்டர் நான் செத்து போய்விடுவேனா டாக்டர்,
இல்லை…! இல்லை…! நான் வைத்தியம் பண்ணினவங்கள்ள பத்துக் கு ஒன்பது பேர்தான் சாவாங்க…! நீங்கபொழச்சிப்பீங்க.
----------------------------------------------------------------------------
டாக்டர் என் கணவர் தூக்கத்துல பேசுகிறார்?
அப்பவாது அவர் பேசட்டும் விட்டுடுங்க…!
--------------------------------------------------------------------------
உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?
நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர், உங்களுக்கு தான்.
--------------------------------------------------------------------------
டாக்டர் என் மாமியார் கால்ல முள் குத்திடுச்சு
முள்ளை எடுக்கணுமா?
முள் சின்னது. அதையேன் தொந்தரவு பண்ணணும்? காலை எடுத்துடுங்க.
காலேஜ் சிரிப்பு
- உன்னோட மூளை ஏன் பிரெஷ்ஸா இருக்கு தெரியுமா? நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும்!!
- என்னதான் நாற்காலிக்கு நாலுகால் இருந்தாலும் அதால் ஓடமுடியுமா? அப்படியே ஓடினாலும் அதை ஓடுகாலின்னுதான் சொல்ல முடியுமா?
- ஜோடியா பைக்ல அவளை கூட்டிட்டு போகும்போது காதல் சாங்கு! அவளோட அண்ணன் பார்த்து உன் காலை எடுத்திட்டான்னா அப்புறம் உனக்கு சங்கு!
- ஒரு பெண் எப்பவுமே உங்களுக்குத் தேவதையாக தெரியவேண்டுமென்றால், அவளை நீங்கள் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும்!
-
- கல்யாணங்கிறது அடிக்கிற சரக்கு மாதிரி, அடிச்சவனுக்கு வாந்தி, அடிக்காதவனுக்கு வெறும் பூந்தி!
- காதலிப்பதற்கும், காதலிக்கப்படுவதற்கும் உள்ள வித்தியாசம் தற்கொலைக்கும், கொலைக்கும் உள்ள அதே வித்தியாசம்தான்!!
- என்னவளுக்கு நானும் அந்த TISSUE பேப்பர் போலத்தான்! உதட்டைத் தொட்டதும் கசக்கி எறிந்துவிட்டாள்!
- அது என்னவோ தெரியவில்லை பசங்க அண்ணான்னு சொல்லும்போது வரும் சந்தோசம் பொண்ணுங்க அண்ணான்னு சொல்லும்போது வருவதில்லை
தமாஷ் அண்ணே தமாஷ்&&&&&&&&&&&&&&&&&&@@@@@@@@
* போலீஸ்காரர் : ஏம்பா ! நீ அந்த சிவப்பு விளக்கைக் கவனிக்கலையோ ?
சைக்கிள்காரர் : கவனிச்சேனுங்க... ஆனா உங்களைத்தான் கவனிக்கலே !
* தாத்தா : " காலம் ரொம்பத்தான் மாறிப் போச்சு ! "
பேரன் : " ஏன் தாத்தா ? " தாத்தா : " ராஜாவை மந்திரியாக்கிட்டாங்களாமே ! "
* ஒரு கல்லூரி மாணவரின் செல்ஃபோனை குடைந்தபோது கிடைத்த எஸ். எம். எஸ் .: " இளநீர் , தண்ணீர் என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது . பீர் , பிராந்தி , ரம் என்று சொல்லும்போதுதான் உதடுகள் ஒட்டும் ."
* இந்த உலகையே ஆட்டிப்படைக்கும் இரண்டு KINGS யாரெனத் தெரியுமா உங்களுக்கு ....? 1 . SMO - KING 2 . DRINK - KING . முடிஞ்சா இந்த மோசமான KINGS - கிட்டேர்ந்து உலகைக் காப்பாத்திக்கோங்க .
* " காலேஜுக்கு ஏன்டா லேட்டு ?" " பைக் பஞ்க்சர் சார் !" " சரி .... பஸ்ல வர்றது ...?" " பஸ் வாங்க வசதி இல்லை சார் !"
* " டாக்டர் ! நீங்க எனக்கு ஒரு காரியம் பண்ணணும் ..." " அதெல்லாம் உங்க பிள்ளைங்ககிட்ட சொல்லி பண்ணச் சொல்லுங்க !"
* " தவளை தண்ணியிலேயும் இருக்கும் , தரையிலேயும் இருக்கும் . ஆனா , நம்ம தலைவர் ..." " தண்ணியிலே தரையில கிடப்பார் !"
* " நம்ம தலைவரு அஞ்சாவது படிக்கும்போதே கள்ளச்சாராயம் வித்தவர்னு எதிர்க்கட்சிக்காரங்க சொல்றதை என்னால் நம்பவே முடியலை !"
" எதனால அப்படிச் சொல்றே ?"
" தலைவர் அஞ்சாவது வரைக்கும் படிச்சிருக்காரா ?"
* ' LOVE ' என்று சொன்னாலும் , ' காதல் ' என்று சொன்னாலும் உதடுகள் ஒட்டாது ... PICK UP , DROP , ESCAPE என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும் .
* " வக்கீலுக்கும் , டாக்டருக்கும் என்ன வித்தியாசம் ?"
" தெரியவில்லையே "
" வக்கீல் சரியாக இல்லைன்னா கேஸ் முடியாது , டாக்டர் சரியில்லைன்னா கேஸ் முடிந்து விடும் !"
நல்ல நல்ல சிரிப்பு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!11
அப்பா: ஓன்னுமில்லைமகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா:...............
பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.
பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.
நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர்
டாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்
நோயாளி: நான் நடக்கலாமாடாக்டர்:
நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க
நோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா.
டாக்டர்: தாராளமா
நோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.டாக்டர்: ம்..ஓட்டலாமே...
நோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.
டாக்டர்: ......????????
சார் அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்
நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"
"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?
சர்வ சாதாரணம்
ஒரு படகில் பல வெளிநாட்டுகாரர்களும்,நமது தமிழ் நாட்டுகாரரும் சென்று கொண்டிருந்தனர்.அவ்வாறு சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறால் படகு முழ்க ஆரம்பித்தது.இதனை பார்த்த கப்பல் கேப்டன் இங்க பாருங்க மக்களே,போட் இந்தாண்ட முழ்வ போவுது,அதனால போட்ல கனமான பொருளு எல்லாத்தையும் கடல்ல கடல்ல தூக்கி வீசுங்க என்றார்.இதை கேட்ட அமெரிக்கர்,அவரது நாட்டில் இருந்து கொண்டு வந்த மூட்டைகனக்கான தங்கங்களை கடலில் தூக்கியெறித்தார்.இதனை பார்த்த கப்பல் கேப்டன் இன்னாயா,தங்கத்த தூக்கி கடல்ல போடுற என கேட்க,இதெல்லாம் சர்வசாதாரணம் என்றார் அமெரிக்கர்.அடுத்து இதை பார்த்த ரஷ்யர் தான் மூட்டை மூட்டையாக கொண்டுவந்த வைரங்களை கடலில் வீசியெறிந்தார்.இதனை பார்த்த கேப்டன்,இன்னாயா நீயும் வைரத்தூக்கி கடலாண்டா போட்டுகின்ன என்றார்.இதெல்லாம் சர்வ சாதாரணம் என்றார் ரஷ்யர்.இதை போலவே அவரவர் தங்களுடைய சொத்துகளை கடலில் விட்டெறிந்து,அதனை சர்வசாதாரணம் என்றனர்.இறுதியாக தமிழனை பார்த்த கேப்டன் நீயும் எதையாவது கடல்ல போடுயா என்க,தமிழன் அருகில் இருந்த ஜப்பான்காரனை யிழுத்து கடலில் போட்டானாம்.அதை பார்த்த கேப்டன் யோவ்,இன்னாயா இது மனுசன கடல்ல தள்ளிட்ட என்க,அன்னாத்தா நம்ம ஊர்ல இதெல்லாம் சர்வ சாதாரணம் என்றானாம் தமிழன்.
இச்செய்தி சிரிக்க மட்டுமே,யாரையும் புண்படுத்துவதற்காக பதிய படவில்லை.









சொகுசா இருக்க தான்...சிரிக்க மட்டும்,
ரீமேக் திருக்குறள்(அதிகாரம்/குறட்டை )
நோ டென்ஷன்! ஒன்லி ரிலாக்ஸ்!
வடை போச்சே...
ஜோக்ஸ்
சிரி சிரி சிரிப்பு!!!!!!!!!!!!!!!!!!!
காலேஜ் சிரிப்பு
தமாஷ் அண்ணே தமாஷ்&&&&&&&&&&&&&&&&&&@@@@@@@@
நல்ல நல்ல சிரிப்பு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!11
சர்வ சாதாரணம்
பிரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்
கடி ஜோக்ஸ்
சிறிது சிரிக்கலாம் வாங்க