இப்பக்கத்தின் பதிவுகள் முழுமை அடையவில்லை. இப்பக்கத்தில் பதிவுகளை சேர்க்கவோ மாற்றம் செய்யவோ விரும்பினால் அதைப்பற்றிய விபரத்தை இங்கே தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் சார்ந்த பதிவுகள்

தமிழர்களின் அளவு முறைகள்

தமிழ் மக்கள் பயன்படுத்திய அளவை முறைகள் நீளத்தை அளக்கவும், நெல், அரிசி போன்ற தானிய வகைகளை அளக்கவும், மருந்து வகை, பொன் போன்றவற்றை அளக்கவும், எண்ணை நீர் போன்றவற்றை அளக்கவும், நிலம், எடை மற்றும் காலத்தை அளக்கவும் பயன்பட்டது. அவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருக்குறள்

362. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றுஅது
வேண்டாமை வேண்ட வரும்.

ஒருவன் ஒன்றை விரும்புவதானால், பிறவா நிலைமையை விரும்பவேண்டும்; அது, அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.

If thou must need long for anything, long for freedom from reincarnation: and that freedom will come to thee if thou long to conquer longing.

பழமொழி

இதன் நிஜ வடிவம் "அறிவுள்ளோர் சிநேகம் அதிக உத்தமம்" என்றிருக்க வேண்டும்.

அறிவுள்ளோர்களுடனான நட்பு நம்மையும் உயர்த்தும் பண்படுத்தும்.

சிநேகம் = நட்புறவு

தமிழ்த் தாய் வாழ்த்து

Tamil's picture


தமிழ்த் தாய் வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாள முந்துளுவும்
உன்னுதரத்தே யுதித்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!
--
மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை

7.84
Your rating: None Average: 7.8 (25 votes)

பிற தளங்கள்