அனைவரும் ஆழ்ந்த
உறக்கத்தில்...
நானோ ஆழ்ந்த யோசனையில்!
மாடிப் படியில் அமர்ந்துகொண்டு
உலகத்தில் படியை பற்றிய
சிந்தனை!
நாம் எவற்றை அழகு
என்று கூறுகிறோம்?
இயற்கையைத் தான்
என்பதில் ஐயமில்லை
அனைத்தையும் வெளிச்சமிட
உதவும் பகலையா?
அழகை மர்மமாக்கப்
பிறந்த இரவையா?
அல்லது இரவின் ஆழத்தைக்
குறைக்க தோன்றிய நிலவையா?
அப்படியென்றால்
நிலவுக்கு அழகூட்டியவன் எவன்?
நிலவையும் ஏன்
பெண் போலத் தேய வைக்கிறான்?
நட்சத்திரங்களை ஏன்
மினுக்க வைத்தான்?
கடலுக்கு மட்டும்
ஏன் கரை?
மேகத்துக்கு மட்டும்
ஏன் பல்வேறு உருவங்கள்?
பூக்களுக்கு மட்டும்
ஏன் மென்மையான குணம்?
மின்னலுக்கு மட்டும்
ஏன் அதிவேகம்?
இடிக்கு மட்டும் ஏன்
மிரட்டும் மத்தள ஒலி?
கனியின் மேல் மட்டும்
ஏன் கிளிக்கு நாட்டம்?
நிலவு ஏன் நான் செல்லும்
போதெல்லாம் எனை
பின் தொடருகிறது?
பகலெல்லாம் சிரித்து மகிழ்ந்தவன்
ஏன் இரவில் தன் சந்தோக்ஷமான
வாழ்க்கையை வாழ்ந்த சுவடின்றி
சாகிறான்?
இந்த நொடி சாகப்போகிறேன்
என்பது கூட தெரியாதவனுக்கு
எதற்கு வாழ்க்கை?
துயிலின் போது எதற்கு
சிலருக்கு மரணம்?
ஏன் குயிலுக்கு மட்டும்
ராகமில்லா மெல்லிசை?
காக்கை என்ன பாவம் இழைத்தது?
அதை கறுநிறத்தில் படைக்க?
ஏன் சூரியனுக்கு மட்டும்
பார்வையால் சுட்டெரிக்கும் தன்மை?
சூரியன் பெண்ணா?
ஆணா?
பெண்களுக்குத் தான்
பார்வையால் சுட்டெரிக்கும் தன்மை
என புராணங்களில் படித்ததுண்டு
பத்தினி ஆகிறாள் பெண் என்றும்!
நட்சத்திரத்தை மட்டும்
ஏன் என்னால் எண்ணமுடியவில்லை?
தொடமுடியாத தூரத்தில்
இருக்க எதற்கு வானம்?
பூவிலுள்ள தேன் ஏன்
வண்டுக்கு மட்டும் சொந்தம்?
ஏன் பறவைக்கு மட்டும்
சிறகு?
நானும் உயிர்தானே?
எனக்கு மட்டும் கால்களா?
ஏன் இந்த வஞ்சகம்
படைத்தவனுக்கு?
நாய்களை மட்டும் ஏன்
நன்றி உள்ளவையாய்
படைத்தான்?
தீய்க்கு ஏன் நீரை
எதிரியாக்கினான்?
மழைக்கு ஏன்
காற்றை எதிரியாக்கினான்?
இயற்கையில் கூட பகை
தேவையா?
நிலவு ஏன் கதிரவனுக்காக
தன்னை பகலில்
ஒளித்துக்கொள்கிறது?
இயற்கையில் இத்தனை
அழகா?
இத்தனை முரணா?
என்னற்ற இன்பத்தை
அளிக்கும் இயற்கையை
மறந்து நாம் எதைத் தேடுகிறோம்?
எதற்கு ஓடிக்கொண்டிருக்கிறோம்?
வாழ்வின் இன்பம்
உழைப்பிலென்றாலும்
உழைத்துக்கொண்டே இருந்தால்
வாழ்வை எப்போது தான் வாழ?
மேற்கண்ட கேள்விக்ளுக்கும்
அனைவரின் மனதிலெழும்
பல என்னற்ற கேள்விகளுக்கும்
காரணம் அக்கேள்விகளின்
ஆழம் தான்!
செயற்கையின் படியில்
நாம் சிறு எறும்புகள்!
உணவுக்காகவும் உடைக்காகவும்
ஊர்ந்துகொண்டே இருக்கிறோம்!
மேகத்தின் மிதப்பும் மோதலும்
மழையைத் தரும்!
ஆனால் மனிதனின் மிதப்பு
ஒரு நாள் கண்ணீர் மழையைத்
தான் தரும்!
நாம் வெறும் துணிதான்
நம்மை நாமே துவைத்துக்கொள்கிறோம்
செயற்கைக் கொடியில்
காய்ந்துகொள்கிறோம்!
சுழன்று சுழன்று வாழ்வின்
பாரம் தாங்காமல்
தரையில் வீழ்கிறோம்!
இயற்கையில் மரணத்தில்
பிறக்கிறது செயற்கை!
மரணம் பொய்க்காது!
மரணத்திற்கும் மரணதண்டனை
கொடுக்கலாம்!
இயற்கையின்
இன்பதுன்பங்களில் பங்கேற்று!
Comments
இயற்கையைப் புரிந்து கொண்டால்
இயற்கையைப் புரிந்து கொண்டால் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும். இறப்பும் பிறப்பும் இயற்கை. இன்பமும் துன்பமும் இயற்கை. இரவும் பகலும் இயற்கை.... அடுக்கிக் கொண்டே போகலாம். இயற்கையெனும் இறைவனை அடைந்து மரணமிலாப் பெருவாழ்வு வாழ்லாம். நல்ல கவிதை. விடை தேடுங்கள்....
பதிலலிப்பதா............?
பதிலலிப்பதா............? பாராட்டுவதா...............? ஆனாலும் அருமையான கவிதைக்கு(கேள்விகளுக்கு) அன்புகலந்த வாழ்த்துக்கள்.....

அன்புடன்:
கவிதை கிறுக்கன்
கவிதை நல்லாயிருக்கு
கவிதை நல்லாயிருக்கு 
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
முதலில் கேள்வியென துளைத்தது
முதலில் கேள்வியென துளைத்தது விடையறியாமலா, அறிந்தும் அறியாதது போலா? இம்மனித வாழ்வில் சில கேள்விகளுக்கு பதிலுண்டு, ஆனால் பல கேள்விகளுக்கு பதில் என்பதே கேள்வியென ஆவதுண்டு,
உள்ளதைப் பற்றி யோசி, உள்ளத்தில் தெளிவு கொள், அதனால் தான் நதி மூலமும் ரிஷி மூலமும் கேட்காதே என்பார்கள்,
சில தொடக்கமும் முடிவும் உண்டு, பல தொடக்கம் மட்டும் முடிவென்பது காண இயலாது, சித்தர்களும்,ஞானிகளும் இப்படித் தான் ஆனார்கள்
ஆழ சிந்திப்பது நலமே, ஆனால் அக்கேள்விகளுக்கு ஆண்டவனும் பதில் தர யோசிப்பான், தங்களது கவிதைக் கேள்விகளுக்கே எனக்கு இப்படி ஆகிவிட்டது என்றால் பாருங்கள்!
நல்ல கேள்வி சிந்தனைகள் அருமை!

அருமையான சிந்தனை:clap:
அருமையான சிந்தனை:clap: .............பரிதி













