Skip to main content
நண்பர்கள்
பதிவுகள்
இல்லம்
தமிழ்
முதல் பக்கம்
|
உதவி தேவையா?
தமிழ் நண்பர்கள்
தமிழ் நண்பர்கள் பட்டியல், தேடல்
உயிர் காக்கும் நண்பர்கள்
இரத்த தானம் செய்யும் உயிர் காக்கும் நண்பர்கள், தேடல்
தமிழ் நண்பர்கள் செயல்கள்
தளத்தில் நடந்ததவை
தமிழ் நண்பர்கள் @ மேப்
நண்பர்களின் இடங்கள் மேப்பில்
பதிவுப்போட்டிகள்
போட்டிகள் பரிசுகள்
கதை கவிதை பட்டறை
புதிய கதை கவிதை உருவாகுமிடம்
விவாத மன்றம்
கருத்து மோதல்கள்
உங்கள் பதிவுகளை தமிழ் நண்பர்களில் பதிவது எப்படி?
சிறப்பு பதிவுகள்
|
புதிய பதிவுகள்
கட்டுரைகள்
தமிழ் கட்டுரைகள்
கவிதைகள்
காதல், நட்பு, தமிழ் கவிதைகள்
கதைகள்
சிறுகதைகள், தொடர்கள்
வலைப்பதிவுகள்
வாக்குப்பதிவுகள்
மன்றம்
உரையாடல்கள்
பகிர்தல்கள்
Status updates, Wall posts
நகைச்சுவைகள்
சிரிப்புகள்
பதிவுகள் தேட...
உங்கள் பதிவுகளை தமிழ் நண்பர்களில் பதிவது எப்படி?
சிறப்பு பதிவுகள்
|
புதிய பதிவுகள்
சமையல்
மருந்தே உணவு! உணவே மருந்து!
யோகா
யோகாசனங்கள், மனநல கட்டுரைகள்
உடல் நலம்
நலமுடன் வாழ உடற்பயிற்சி குறிப்புகள்
அழகு
அழகு குறிப்புகள்
பகிர்தல்கள்
மகளிர் பக்கம்
நகைச்சுவைகள்
சிரிப்புகள்
பதிவுகள் தேட...
உங்கள் பதிவுகளை தமிழ் நண்பர்களில் பதிவது எப்படி?
சிறப்பு பதிவுகள்
|
புதிய பதிவுகள்
தமிழ் மொழி
தமிழ் பழமொழிகள்
தமிழ் நூல்கள்
தமிழ் இலக்கியம்
தமிழ் எழுத்தாளர்கள்
தமிழ் சான்றோர்கள்
தமிழ் மரபு, கலாச்சாரம்
தமிழக வரலாறு
தமிழக சுற்றுலா
முக்கிய இடங்கள், சுற்றுலா தலங்கள்
வருக நண்பரே, புதியவரா?
உள்நுழை
இணைக
கடவுச்சொல்?
தமிழ் நண்பர்கள் போட்டிகள் பரிசுகள் நிலவரங்கள்
தமிழ் நண்பர்கள் போட்டிகள் பரிசுகள் நிலவரங்கள்
தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்
தமிழ் நண்பர்கள் இணைய தளத்தில் ஒவ்வொரு மாதமும் போட்டிகளும் பரிசுகளும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வெற்றி பெறுபவருக்கு இலவச இணையதளம் பரிசு வழங்கப்படுகிறது.
பரிசு இலவச இணைய தளம் அல்லது தமிழ் நூல்கள்
ஒவ்வொரு மாதமும் முதலிடம் பிடிக்கும் மூன்று பதிவுகள் தெரிவு செய்யப்படும்.
மூன்று பதிவுகளில் முதலிடம் பிடிக்கும் எழுத்தாளருக்கு இலவச இணையதளம் (Free website) சிறப்பு பரிசாக வழங்கப்படும். அவர் விரும்பினால் தமிழ் நூல்களை பரிசாக பெறலாம்.
மற்ற இருவரின் பெயரும் நிலுவையில் வைக்கப்படும். அவர்கள் அடுத்து வரும் போட்டிகளில் மறுபடியும் வெற்றி பெறும் போது (முதல் மூன்று பதிவுகளில் ஏதேனும் ஒன்றில்) இலவச இணையதளம் பரிசாக கிடைக்கும்.
ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே இணையதளம் பரிசாக கிடைக்கும். ஆனால் ஒருமுறை வெற்றி பெற்று இணையதளத்தை வென்றவரே மீண்டும் போட்டியில் வெற்றி பெற்றால் முதல் தடவை தவிர்த்து ஒவ்வொரு இரண்டாவது வெற்றிக்கும் அவரது இணையதளத்தின் பெயர் (Domain name) ஒருவருடத்திற்கு இலவசமாக புதுப்பித்தல் (
Renewal
) செய்து தரப்படும்.
இணையதளம்
இணைய தளம் என்பது
Domain name, Hosting, Database, Web design
இவற்றை உள்ளடக்கியதாகும்.
வெற்றி பெற்றவர் விருப்பப்படி இணையதளத்தின் பெயர்(Domain name) பதிவு செய்யப்படும்.
இணைய தளத்தின் வடிவமைப்பு இலவசமாக செய்து தரப்படும்.
இணைய தளத்தில் என்னென்ன வசதிகள் தேவை என்பதை நீங்களே தெரிவு செய்து கொள்ளலாம். (
*
விதிமுறைகளுக்கு உட்பட்டது)
இணைய தளம் கண்டிப்பாக தமிழில் இருக்கும்.
இணைய தளம் Facebook, Google Analytics, Google Adsense, Google Apps முதலிய சேவைகளுடன் இணைப்பட்டு வழங்கப்படும்.
இணையதளத்தை நிர்வகிப்பதற்கான கையேடு வெற்றியாளருக்கு வழங்கப்படும்.
வெற்றி பெற்றவருக்கு ஏற்கெனவே இணைய தளம் இருந்து அதற்கு வெற்றி பெற்ற அடிப்படையில் பெயர் புதுப்பித்தல் (Renewal) மட்டும் போதும் என்றாலும் அவை பரிசீலிக்கப்படும்.
வெற்றி பெற்றவர் ஏற்கெனவே வலை தளம் வைத்திருந்து அதற்கான இணைய தள பெயர் மட்டும் போதும் என்றால் அவை பரிசீலிக்கப்படும்.
ஒவ்வொரு வருடமும் கடைசியில் இணைய தளம் பெறாத ஆனால் நிலுவையில் இருக்கும் வெற்றியாளர்களுக்கு தமிழ் நூல்கள் பரிசாக தரப்படும்.
பரிசிற்கான பதிவுகள் தெரிவு செய்யும் முறை
வாசகர்களை கவரும் பதிவுகளுக்கே பரிசுகளை வழங்க உள்ளோம். எனவே வாசகர்களாகிய நீங்கள் தான் நடுவர்கள். நீங்களே பதிவிற்கான தரத்தை வழங்குகிறீர்கள்.
நீங்கள் வழங்கும் தரத்தின் அடிப்படையில் முதலிடம் பெறும் பதிவுகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
ஒரு வேளை பதிவுகளை தெரிவு செய்யப்படுவதில் குழப்பம் வருமாயின் தமிழ் நண்பர்கள் நிர்வாகமே பரிசிற்கான பதிவை தெரிவு செய்யும்.
ஒருமாதம் பதியப்படும் பதிவுகளுக்கு அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை நீங்கள் தரநிர்ணயம் கொடுக்கலாம். அதாவது சித்திரை மாதம் பதியப்படும் பதிவுகளுக்கு வைகாசி 15 தேதிவரை தரப்படும் தர நிர்ணயத்தின் அடிப்படையில் வைகாசி மாதம் 16 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். வைகாசி மாதம் பதியப்படும் பதிவுகளுக்கு ஆனி மாதம் 15 தேதிவரை தரப்படும் தர நிர்ணயத்தின் அடிப்படையில் ஆனி மாதம் 16 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஒரு பதிவிற்கு தரப்படும் தர நட்சத்திரம், கருத்துகள், பதிவை விருப்பப்பதிவாக தெரிவு செய்தவர்கள் எண்ணிக்கை இவற்றின் அடிப்படையில் ஒரு பதிவு முதலிடத்திற்கு வரும்.
பதிவுகளை அனுப்பும் முறை
போட்டியில் பங்கேற்ற பதிவுகளை எங்களுக்கு தனியாக அனுப்பி வைக்க வேண்டிய தேவை இல்லை.
தங்கள் பதிவுகளை தமிழ் நண்பர்கள் தளத்திலேயே நீங்கள் பதிவு செய்தால் போதுமானது.
போட்டிக்கான பதிவை பதியும் போது பதிவு படிவத்தில் "
போட்டியில் சேர்க்க வேண்டும்
" என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
போட்டி விதிமுறைகள்
பதிவுகள் உங்களின் சொந்த பதிவாக இருக்க வேண்டும்.
பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். முக்கியமாக தேவைப்படும் இடங்களில் மட்டும் மற்ற மொழிகளை பயன்படுத்தலாம்
நீங்களே உங்கள் பதிவிற்கு தரநிர்ணயம் கொடுக்க உரிமை உண்டு. ஆனால் நீங்கள் வேறு பல அங்கத்துவத்தில் வந்து தரநிர்ணயம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டால் பதிவு போட்டியில் இருந்து நீக்கப்படும்.
போட்டிக்கான பதிவுகள் வேறெங்கும் இதற்கு முன் பதியப்பட்டிருக்கக்கூடாது. ஒவ்வொரு மாதமும் பரிசுகள் அறிவிக்கப்பட்ட பின் போட்டிக்கான பதிவை உங்கள் வலைதளத்திலோ வேறு இடங்களிலோ பதியலாம். தமிழ் நண்பர்கள் தளத்தில் "முதன் முதலில் பதிவுகளை இங்கே தான் பதியவேண்டும் என்ற விதிமுறை" இல்லாததால் நீங்கள் உங்கள் சொந்த பதிவுகளை வேறெங்கும் பதிந்திருந்தாலும் வழக்கம் போல இங்கும் பதியலாம். ஆனால் அவை போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
இப்போட்டிகள் இந்ந நந்தன வருடம் (ஆங்கில வருடம் 2012) தமிழ் மாதம் சித்திரை முதல் ஒவ்வொரு மாதமும் அடுத்த வருடம் (ஆங்கில வருடம் 2013) பங்குனி வரை நடைபெறும். அதற்கடுத்த வருட போட்டிகள் மற்றும் அதன் மாற்றங்கள் இருந்தால் அவை பின்னர் அறிவிக்கப்படும்.
பதிவுகள் அனைத்தும் தமிழ் நண்பர்கள் தளத்தின் இயல்பான
விதிமுறை
களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
உங்கள் பதிவை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கு சில உதவித்துளிகள்
பதிவின் தலைப்பை மட்டுமல்லாது பதிவையும் படிக்கத்தூண்டும் வகையில் வைத்திருங்கள்.
தங்கள் பதிவுகள் சிறந்த கருத்துகளுடனும் எளிதில் புரியும் படியும் மேன்மேலும் வாசகர்களை படிக்க வைப்பதாகவும் இருக்கட்டும்.
சிறப்பான பதிவுகளை பதிவது மட்டுமல்லாது வாசகர்களை தக்க வைத்துக்கொள்வதும் எழுத்தாளருக்கு ஒரு கலைதான் என்பதை ஞாபகம் வைக்கவும்.
தளத்தில் அதிகம் நண்பர்களை சேர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களின் பதிவுகளுக்கு நீங்கள் உதவினால் உங்கள் பதிவிற்கும் அவர்கள் உதவுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
பதிவுகளை பதிவிலேயே கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டி மூலம் பேஸ்புக், ட்விட்டர், கூகிள்+ போன்ற சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து தங்கள் நண்பர்களையும் பதிவிற்கு தரம் கொடுக்கவும் விருப்பப்பதிவாக சேர்க்கவும் கேட்கலாம். இது அனுமதிப்படுகிறது. ஆனால் நீங்களே பல அங்கத்துவ கணக்கை வைத்திருந்து இதை செய்வது தடுக்கப்பட்டது ஆகும்.
தர நிர்ணயம் கொடுக்கும் நண்பர்கள் கவனத்திற்கு
உங்கள் நண்பர்களின் பதிவுகள் முதலிடத்திற்கு வர வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லை.
பதிவுகளை ஆண், பெண், நண்பர் என்ற பாகுபாடு இல்லாமல் பதிவுகளையும் அதன் தரத்தையும் வைத்தே எடை போட வேண்டுகிறோம்.
அனைத்து பதிவுகளையும் படித்து கருத்துகளையும் தர நட்சத்திரத்தையும் கொடுக்க வேண்டுகிறோம்.
"போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்"
இதுவரை வெற்றி பெற்றவர்கள்
பெயர்
வெற்றி பெற்ற முறைகள்
பரிசு
நாக சுந்தரம்
1
vaikaritamilmandram.in
தர்ஷினி
1
தமிழ் நூல்கள்
ருக்மணி
2
நிலுவையில் உள்ளது
தனலஷ்மி கண்ணன்
1
thavathtamilmanram.in
கனிமொழி
2
இராஜேந்திரன் தமிழரசு
2
rajaninmoganam.com
கோபால்
2
தமிழ் நூல்கள்
ஜோதி
3
வடிவமைப்பில் உள்ளது
லதா பாலு
1
தமிழ் நூல்கள்
பூங்கோதை
2
தமிழ் நூல்கள்
யாழ்பாவாணன்
1
சித்திரை மாத போட்டி சிறப்பு போட்டியாக வலம் வருகிறது. பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்!
போட்டிகள்
சித்திரை சிறப்பு தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்
போட்டி இல்லை! பரிசு உண்டு! தை மாதம் நந்தன வருடம் தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்
மார்கழி மாதம் நந்தன வருடம் தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்
கார்த்திகை மாத சிறுகதை சிறப்பு தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்
ஐப்பசி மாதம் நந்தன வருடம்: தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்
மகளிர் சிறப்பு: புரட்டாசி மாதம் நந்தன வருடம்: தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்
ஆவணி மாதம் நந்தன வருடம்: தமிழ் நண்பர்கள் பதிவுப் போட்டிகள்
ஆடி மாதம் நந்தன வருடம்: தமிழ் நண்பர்கள் பதிவுப் போட்டிகள்
ஆனி மாதம் நந்தன வருடம்: தமிழ் நண்பர்கள் பதிவுப் போட்டிகள்
தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்: வைகாசி மாதம் நந்தன வருடம்
Pages
1
2
அடுத்த ›
கடைசி »
போட்டி பற்றிய சில சந்தேகங்களும் விளக்கங்களும்
வெற்றி பெறும் பதிவுகளை தெரிவு செய்வது யார்?
பதிவுகளுக்கு கிடைக்கும் புள்ளிகள் அடிப்படையிலேயே வெற்றி பெற்ற பதிவுகள் தெரிவு செய்யப்படுகிறது. இதில் தனிமனித தலையீடு கிடையாது.
பதிவுகளுக்கான புள்ளிகள் எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன?
ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகள், விருப்பங்கள், தர நட்சத்திரங்கள் போன்றவை கணக்கிடப்பட்டு அதற்கு புள்ளிகள் தானாகவே வழங்கப்படுகிறது.
நான் போட்டிக்காக பதிவுகளை தமிழ் நண்பர்கள் தளத்தில் பதிந்திருந்தேன். அவை போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஏன்?
தங்கள் போட்டிக்காக பதிவுகளை பதிவு செய்யும் போது பதிவு படிவத்தில் "போட்டியில் சேர்க்க வேண்டும்” என்பதை தெரிவு செய்திருக்க வேண்டும். மேலும் தமிழ் நண்பர்களில் பதியப்பட்ட வலைப்பதிவுகள், கட்டுரைகள், கவிதைகள், கதைகள், சமையல் பதிவுகள் போன்றவை மட்டுமே போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்படும்.
தளத்தில் கட்டுரைகளை பதிவு செய்ய வசதி இல்லை. ஏன்?
சிறப்பாக எழுதப்பட்ட பதிவுகள் மட்டுமே கட்டுரை பகுதியில் வெளியிடப்படுவதால் கட்டுரைகளை மட்டும் நீங்கள்
info@tamilnanbargal.com
முகவரிக்கு பதிவுக்காக என்று குறிப்பிட்டு எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பதிவுகளுக்கு கருத்திட நான் தளத்தில் நுழைய வேண்டியிருக்கிறது. ஏன்?
தளத்தில் நுழையாமல் கருத்திடும் வசதியில் ஒருவரே வேறு பல மின்னஞ்சல்களை பயன்படுத்தி வேறு வேறு நபர்களாக வந்து கருத்திட வாய்ப்பு உள்ளது. இவை தவறான வழிகாட்டுதலாகும். எனவே அனைவரும் தளத்தில் நுழைந்த பின்னரே கருத்திடுமாறு செய்யப்பட்டுள்ளது.