அன்பாய் இரு ! இது ஆன்றோர் வாக்கியம் ! பகைவனுக்கும் அருள்வாய் என்று பாரதியும் பாடிவிட்டான் ! கேட்பதற்கு மிக இனிமை ! கடைபிடிப்பதெளிதாமோ ? அன்னை தந்தை அவர் உறவு அன்பான தன் மனையாள் ! இவரிடம் இயல்பாக இன்முகத்தைக் காட்டிடலாம் ! பகைவனுக்கு அருளுவதோ ? அப்பப்பா மிக கடினம் !
1, கடலுக்குள் செல்லும் மீனவனே நீ திரும்பி வருவது உன் கையில் இல்லையோ ? சுனாமி அடித்து செல்லுமோ என்று இல்லை ! சூழ்ந்திட்ட மனிதர் சுட்டுவிடுவாரோ என்று !
ஓ இறைவனே ! ந மீனாய் பிறந்து மண்ணைக்காத்தாய் ! உனது அவதாரம் மீண்டும் தேவை ! மீனாய் மாறி எங்கள் மீனவர்களை காப்பாய் !
2. அமுதத்திற்காக ஆமையானாய் நீ அன்று !
அதிவேக ரயிலிலே அன்றொரு நாள் பயணித்தேன் ! என்னெதிரே வந்தமர்ந்தார் அக்கரையாய் அல்லாவை அனுதினமும் தொழுகின்ற இனத்திலே ஓர் முகம்மதியர் ! பக்கத்தில் ஓர் பாட்டி ! பரந்தாமன் புகழ் பாடி இரந்தோர்க்கு ஈந்திடுவாள் ! இனம் வேறு என்றாலும் எதிரெதிரே அமர வைத்து புதிரை போட்டதுவே
ஓர்நாள் மாலை தோட்டந்தனில் அமர்ந்திருந்தேன் தோட்டமென்றால் ரோஜா முல்லை மலர்கள் பலவும் என்று கற்பனை செய்யவேண்டாம். காய்ந்த செடிகள் இரண்டு அதனோடு மஞ்சள் செடியும் உண்டு.
(06.11.2011)
அன்பு செய்ய வேணுமென்று அனைவருமே சொல்லுறார். பண்பாக பழகவேண்டும் என்று பாரில் பலர் கூறுவார் என்புதோல் எடுத்த பயன் என்னவென்று கேட்பீரேல்
அன்பெனும் ஓர் பங்குச்சந்தை ! (25/10/2011)
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. இது வள்ளுவர் வாக்கு. கொள்கையிதை கொண்டுவிட்டால் துன்பம் இல்லை வாழ்க்கையிலே !
தூரம் அதிகமில்லை !
மாறிவிடு இக்கணம் ! (மாற விரும்பும் - வேதாந்த கவியோகி நாகசுந்தரம்)
உலகம் திருந்த வேண்டும் என்று பலவிதமாய் பேசுறோம் ! சுலபமாக்க வேண்டும் என்று சுற்றி சுற்றி வருகிறோம் !