Agalidam Foundation

இங்கு அகலிடத்தின் தாய்மையில் ஜீவ காருண்யம் என்ற குழ‌ந்தையை பிரசவிக்க முயற்சிக்கிறோம். புகழிடம் தேடிப் புறப்படுவோர் சென்றடைந்து சேருமிடமாக அகலிடம் இருக்க நாம் ஆசைப்படுகிறோம்.

கண்ணொளி இல்லையென்றும், கால்வலி கரைந்ததென்றும், பிச்சை எடுத்துப் பிழைப்பைப் பார்ப்பதென்றும், எண்ணத்தின் நினைவு என்னைவிட்டும் போனதென்றும், இன்னபிற வழிகளில் இழிவுபடுத்தப்பட்டும், வண்ணக்கலவையாக வந்து பிறந்து விட்டு, வெள்ளையும் கருப்புமாக வெளிறிப் போனவர்கள், கண்ணும் கருத்துமாக கவனிக்கபட்டு உள்ளக் குறைபாடுகள் உறுதியாக நீக்கப்பட்டு கடைசி மூச்சைக் கவலையின்றிக் கடக்கும் வரை.........................
அகலிடம் அவர்கள் புகழிடமாக இருக்க நாம் பேராசைப்படுகிறோம்.

விழிகள் இருந்தும் குருடர்களானோர், செவிகளிருந்தும் செவிடர்களானோர், விழிப்பு வந்தும் நடிப்புக்குத் தூங்குவோர் பொது நலம் செய்ய சுயந‌லம் பார்ப்போர், என சுற்றியிருக்கும் புதர்களை அகற்றி விளைநிலம் போன்ற, மனநலம் ஊக்கி ஆக்கம் செய்ய நாம் ஆயத்தமாகிறோம்

Agalidam Foundation

33, Subramaniyapuram, II Cross,
R.S. Puram, Coimbatore-641002,
Tamil Nadu, India.

Phone: +91 422 436 9416
Mobile: +91 93458 82707

Web: www.agalidam.org
Mail: info@agalidam.org


http://www.agalidam.org


இப்பக்கத்தை தங்கள் தளத்தில் இணைக்க நிரல்: