குங்குமம் என்றாலே மங்களம் என்று பொருள்.
அதை கலப்படமில்லாமல் நாமே குங்குமத்தை தயாரிக்கலாம்
தேவையானவை
நல்ல எலுமிச்சை பழங்கள், கொடி எலுமிச்சை மிகவும் நல்லது.
மஞ்சள் துண்டுகள்
வெண்காரம்
படிகாரம்
எலுமிச்சையை நறுக்கி சாறு எடுத்து மஞ்சள் துண்டுகள் மூழ்குமாறு செய்ய வேண்டும். இதற்கு மண் கலங்களை உபயோகிப்பது நல்லது.
வெண்காரம், படிகாரம் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சைச் சாற்றில் கலக்க வேண்டும்.
வெண்காரம், படிகாரத்தை சிறிது அதிகமாகசேர்த்தால் சிவப்பு நிறம் கூடுதலாக இருக்கும். ஆனால் அது தோலுக்கு அவ்வளவு நல்லதல்ல.
இக்கலவையினை நிழலில் நீர் வற்றுமளவிற்கு காயவைத்து எடுத்துக்கொளள்ளவும்
(இச்செய்முறையை ஹயக்ரீவப் பெருமாள் அகத்தியருக்கு உபதேசித்ததாக வரலாறு கூறிகிறது.)
கருத்துகள்
ஐயா, மிகவும் பயனுள்ள
ஐயா, மிகவும் பயனுள்ள தகவல்........
வெண்காரம், படிகாரம் என்னவென்று தெரிவித்தால் நாங்களும் முயற்சி செய்துப் பார்க்கலாம்









